வேலைக்கு சென்ற கணவன் எப்போது வீட்டுக்கு வருவான் என்று காத்திருந்தது அந்த காலம். ஆனால் இந்த காலத்தில் 80% இளம் பெண்கள் வீட்டில் கணவன் இல்லாத நேரத்தில் தனது விருப்பப்படி சில விஷயங்களை செய்கிறார்கள்.
பெண்களுக்குத் திருமணத்துக்குப் பின் நட்பு வட்டம் மிகச்சிறியதாக சுருங்கிவிடும். தங்களுடைய நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்தல் அல்லது வெளியில் சென்று சந்தித்தல் போன்றவற்றைச் செய்கிறார்கள். அந்த நேரங்களில் தங்களுடைய மனம்விட்டு பேசுகிறார்கள்.
வீட்டில் யாருமில்லாத சமயங்களில் பெண்கள் பெரும்பாலும் போனில் அரட்டை அடித்தே நேரத்தைப் போக்கிவிடுகிறார்கள்.
பெண்கள் தினமும் தனது கணவனுக்கு பிடித்த மாதிரி சுவையான உணவை சமைத்து கொடுத்தாக வேண்டும். கணவன் ஊரில் இல்லை என்றால் சமையல் அறை அவர்கள் வரும் வரை மூடப்பட்டுவிடும். அவர்களுக்காக தனியே சமைத்து சாப்பிடுவதைப் பெரும்பாலும் பெண்கள் விரும்புவதில்லை.
பெண்கள் அந்த வேலை, இந்த வேலை என ஓடாமல், நிம்மதியாக ரொம்ப நேரம் குறட்டை விட்டு தூங்குவார்கள்.
ரிமோட் யார் வைத்திருப்பது என்ற பிரச்னை இல்லாமல் டீவி சீரியல் பார்ப்பது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தால் எப்போதும் போல அலறியடித்துக் கொண்டு ஓடிவராமல், ஆபிஸ் முடித்து சீக்கிரமா போய் சமைக்கணும், அத செய்யணும், இத செய்யணும் என்ற கவலையில்லாமல் நிதானமாக இருக்காது, எவ்வளவு நேரம் வேண்டுமானலும் ஆபிஸில் வேலை செய்துவிட்டு நிதானமாக வீடு திரும்புவார்கள்.
இதுபோன்று தங்களுடைய எண்ண ஓட்டம் போல் தங்களுக்குப் பிடித்ததை மட்டும் ரசித்து செய்து கொண்டிருப்பார்கள். இதுவே வீட்டில் எல்லோரும் இருந்தால் தங்களைப் பற்றி யோசிக்க அவர்களுக்கு நேரம் இருக்காது. வீட்டில் உள்ளவர்களைப் பற்றி சிந்திக்கவே அவர்களுக்கு நேரம் போதாது.