நாம் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதில் பெரிதாக கவனம் செலுத்துவதே கிடையாது. எந்த விஷயம் எப்போது தோன்றுகிறதோ அதை அப்படியே செய்து பழகிவிட்டோம். அதனால் பகல் நேரத்தில் என்ன செய்ய வேண்டும், இரவில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரியாமலே செய்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் இரவில் சில விஷயங்களை செய்வது தவறு என்று தெரியாமலேயே செய்து கொண்டிருக்கிறோம். அப்படி என்னனென்ன விஷயங்களை இரவில் நாம் செய்யவே கூடாது?
இரவு நேரத்தில் சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் செல்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். பெரும்பாலும் இரவு நேரத்தில் ஃபாஸ்ட்புட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இரவு நேரத்தில் யாருடனும் சண்டை போடாதீர்கள். ரிலாக்ஸாக தூங்கச் செல்லுங்கள்.
அடிக்கடி சினிமா இரவு காட்சி பார்ப்பதை தவிர்க்கவும். இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை தவறில்லை. அடிக்கடி இரவு காட்சி பார்ப்பதை தவிர்க்கலாம்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு டிவி அல்லது மொபைல் போன் போன்றவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தூங்கும் போது இறுக்கமான ஆடை அணிவதை முக்கியமாகத் தவிர்க்க வேண்டும்.
இரவு உறங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். படுக்கைக்கு அருகில் எப்போதும் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
இருட்டில் உறங்குவதுதான் நல்லது. அப்போதுதான் ஹார்மோன் சீராக சுரக்கும். அதிக வெளிச்சத்தில் உறங்குவதை தவிர்க்கவும். வெளிச்சம் வேண்டுமானால் மிக மெல்லிய வெளிச்சம் தரும் விளக்குகளை வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த விஷயங்களை இரவு நேரத்தில் தவிர்த்து வந்தால் உடல் மற்றும் மன நலன் ஆகிய இரண்டும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.