நம்முடைய உடலில் சிலருக்கு முகம் வெளுப்பாக இருக்கும். ஆனால் கை மற்றும் சருமப் பகுதி நிறம் குறைவாக இருக்கும். சிலருக்கு அப்படியு நேர்மாறாக, முகம் கருமையாகவும் மற்ற உடல் பகுதிகள் வெளுப்பாகவும் இருக்கும்.
இதற்குக் காரணம் என்னவென்றே நம்மில் பலருக்கும் புரியாது. நம்முடைய நிறம் மரபணுக்களால் தீர்மானிக்கப்பட்டாலும் ஊட்டச்த்து நிறைந்த உணவுகள், மினரல்கள், சூரியஒளி ஆகிய பல விஷயங்கள் நம்முடைய சருமம் திடீரென கருத்துப் போவதற்கும் காரணமாக இருக்கின்றன.
நம்முடைய உடலில் உள்ள இறந்த செல்களும் நிறம் மங்கிப் போவதற்குக் காரணமாக அமைந்துவிடும்.
நமது உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள மறைவான இடங்கள் அனைத்தும் தான் அதிக கருமையாக இருக்கும்.
ஏனெனில் மறைவான இடங்களில் அதிகமாக காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால், அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் அதிகமாகி, கருமை நிறத்தினைக் கொடுக்கிறது.
நமது உடம்பில் அப்படி கருப்பாக இருக்கும் ஒரு இடங்களில் ஒன்று தான் அக்குள்.
அந்த அக்குள் பகுதியில் உள்ள கருமையை எப்படி எளிமையாகப் போக்க முடியும்.
நாட்டுச் சர்க்கரை நமது அக்குள்களில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்தைப் பளிச்சிட செய்யும் தன்மைக் கொண்டது. எனவே சர்க்கரையை நீரில் கலந்து, அதை அக்குள்களில் ஸ்கிரப் செய்து வர வேண்டும்.
உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. எனவே இது இயற்கையாகவே நம்முடைய சருமத்தின் கருமையைப் போக்கி நிறத்தை மேம்படுத்தும். குறிப்பாக இதுபோன்ற இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் உணடாகாது.
தினமும் குளிக்கும் முன், எலுமிச்சை சாற்றில் சிறிது நீர் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, அக்குள்களில் தேய்த்து, 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். பின் குளித்து முடித்த தும் ஏதேனும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பேக்கிங் சோடாவை தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் கலந்து அதை பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் உலர வைக்க வேண்டும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்த வந்தாலே போதும். அக்குளில் உள்ள கருமை நீங்கி, பளிசென இருக்கும்.
வெள்ளரிக்காய் நமது சருமத்தின் கருமையை போக்கி, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே தினமும் வெள்ளரிக்காயை வெட்டி, அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும்.