Home பெண்கள் அழகு குறிப்பு Tamil Beauty Tips,முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் உங்களுக்கு முதுமைத் தோற்றத்தைத் தருகிறதா? இதோ தீர்வு…

Tamil Beauty Tips,முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் உங்களுக்கு முதுமைத் தோற்றத்தைத் தருகிறதா? இதோ தீர்வு…

30

முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க பல்வேறு காஸ்மெடிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் பயனில்லை எண்ட்ரால் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.

இயற்கை ஃபேஸ் மாஸ்க்:

இந்த மாஸ்க்கை முகத்திற்கு போட்டால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் ஒரே வாரத்தில் மறைவதைக் காணலாம்.

1.. முதலில் ஒரு பல் பூண்டு எடுத்து தோலுரித்து, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

2.. பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

3.. அடுத்து அதோடு 1 டேபிள் ஸ்பூன் க்ளே பவுடர் சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

4.. பின் முகத்தில் உள்ள அழுக்கை, பாலில் நனைத்த பஞ்சுருண்டை பயன்படுத்தி துடைத்து எடுத்துவிட வேண்டும்.

5. பிறகு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி 20-30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், ஒரே வாரத்தில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, சருமம் இளமையுடன் மிளிர்வதைக் காணலாம்.