மாசு மருவில்லாத சருமம் நினைத்தவுடன் கிடைத்துவிடாது. உடனுக்குடன் பளிச்சென தெரிவதற்கு, சில அழகு சாதனப் பொருட்கள் கடைகளில் கிடைக்கலாம். நிரந்தர தீர்வு தரும் அழகு சாதனப்பொருட்கள் என்று எதுவுமே கிடையாது.
ஆனால் இயற்கையான பொருட்கள் உடனுக்குடன் நன்மைகளைத் தருவதில்லை என்றாலும், அவை நிரந்தர தீர்வைத் தருவன. அவை முகத்துக்கு இயற்கையான பளபளப்பைத் தரும். அதனால், மாசு மருவற்ற சருமத்தைப் பெறுவதற்கு வீட்டிலேயே சில ஃபேஸ்பேக்குகளைப் ட்ரை பண்ணலாம்.
முட்டையின் மஞ்சள் கருவையும் வெள்ளைக்கருவையும் தனித்தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளவும். முதலில் வெள்ளைக்கருவை முகத்தில் அப்ளை செய்து, நன்கு காயவிட்டு கழுவவும். அதன்பின், 10 நிமிடங்கள் கழித்து, மங்சள் கருவை அப்ளை செய்து, பத்து நிமிடங்கள் வரை உலர விடவும். நன்கு உலர்ந்த பின்பு, வெந்நீரில் முகத்தைக் கழுவவும்.
ஓட்ஸ் முகத்துக்கு நல்ல ஸ்கிரப் ஆகப் பயன்படும். 1/4 கப் ஓட்ஸ், 1 ஸ்பூன் தயிர், 2 ஸ்பூன் தேன் மற்றும் 1 முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை எடுத்து, சிறிது வெந்நீர் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் தடவி, உலர விடவும். இந்த கலவை முகத்துக்குள் நன்கு உள்ளிழுக்கப்பட்டதும் லேசாக, வெதுவெதுப்புடன் உள்ள நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சருமத்தில் பெரும்பாலும் முட்டிப்பகுதியும் பாதங்களும் மற்ற இடங்களைவிட கருப்பாக இருக்கும். அந்த கருமையைப் போக்க ஆலிவ் ஆயிலுடன் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்து கலந்து, மூட்டுப்பகுதியில் நன்கு தேய்க்கவும். நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி விடலாம். தொடர்ந்து இந்த முறையைச் செய்து வந்தால், மிக விரைவிலேயெ மூட்டுப்பகுதிகளில் உள்ள கருமை நீங்கும். தோலும் மென்மையாகும்.
வறண்ட சருமத்துக்கு வாழைப்பழம் கொண்டு போடப்படும் ஃபேஸ்பேக் நல்ல தீர்வாக அமையும். ஒரு வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொண்டு, அதனுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் வரை உலரவிட்டுக் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வரவேண்டும்.