பெரும்பான்மையான வீடுகளில் பெண்களின் திருமணத்தை நீண்ட நாட்கள் தள்ளிப்போட நினைப்பதில்லை.
இருப்பினும் சில பெண்கள் தன் காதலன் தன்னை தான் திருமணம் செய்துகொள்வான் என காத்திருப்பதை காண்கிறோம்.
ஒரு சில காதல்கள் குறிப்பிட்ட சில லட்சியங்களுக்காக காத்திருந்தாலும், ஒரு சில ஆண்கள் பெண்களை பொழுதுபோக்குக்காக காதல் செய்வதும் உண்டு.
இதனால் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது.
1. முன்னால் காதல் உண்மை இல்லை ஒரு ஆணின் முன்னால் காதலை வைத்து கூட அவன் காதலை மதிப்பவனா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் காதலனின் முன்னால் காதல் ஏன் பிரிந்தது என கேட்டுப்பாருங்கள்.
அது ஒன்றுக்கும் ஆகாத காரணமாக இருந்தால், அது பொழுதுபோக்கான காதல் என்று அர்த்தம்.
உங்களையும் கூட வெறுமனே ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி கலட்டிவிட்டுவிடலாம்.
2. திருமணத்தில் தாமதம் அவர் உங்களை காதலிப்பதாக சொல்லி இருக்கலாம்.
ஆனால் திருமணத்தை மட்டும் தள்ளிப்போட்டுக்கொண்டே செல்வது அவர் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதை குறிக்கும்.
3. அவரது குடும்பத்தை சந்தித்ததில்லையா? உங்கள் காதலனுக்கு சகோதரர் அல்லது சகோதரி இருந்தால், கண்டிப்பாக உங்களை அறிமுகம் செய்து வைத்திருப்பார்.
ஏனெனில், நீங்கள் அவரது காதலி என்று சொல்லிக்கொள்ள அவருக்கு பெறுமையாக இருக்கும்.
அப்படி அறிமுகம் செய்து வைக்கவில்லை என்றால், கட்டாயம் அவர் உங்களை திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அர்த்தம்.
4. காதல் பிரச்சனைகள் உங்களது காதல் உறவு பிரியும் அளவிற்கு ஏதேனும் சண்டை வந்தால் கூட, அவர் தனது பிரச்சனையை பற்றி உங்களிடம் பேசமாட்டார்.
5. உறவை பற்றி சொல்லமாட்டார் அவர் உங்களை பொது இடங்களில் ஒருவேளை கையைப்பிடித்து அழைத்து சென்றால் கூட, தனது நண்பர்களிடத்தில் அறிமுகம் செய்யும் போது உங்கள் பெயரை மட்டுமே சொல்லி அறிமுகப்படுத்திவைப்பார்.
உங்களை தன்னுடைய காதலி என்று சொல்லமாட்டார்.
6. எதிர்கால திட்டங்கள் அவர் ஒரு ஆண்டு அல்லது அதற்கு பின்னர் இங்கே செல்லலாம் என ப்ளான் செய்யும் போது அதில் நீங்கள் இருக்கமாட்டிர்கள்.
நாம் இருவரும் சேர்ந்து எதிர்காலத்தில் இது போன்று செய்யலாம் என்பது போல எந்த திட்டங்களையும் அவர் உங்களுக்காக வைத்திருக்கமாட்டார்.
இது அவர் உங்களை குறுகிய கால துணை என்று நினைப்பதற்காக அறிகுறியாகும்.
7. ஆர்வம் இல்லாமை அவர் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திப்பதில் சற்றும் ஆர்வம் இல்லாமல் இருப்பார்.
உங்களை திருமணம் செய்துகொள்ள நினைப்பவராக இருந்தால், தன் காதலியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் அவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும்.
அவ்வாறு இல்லை என்றால் உங்களை திருமணம் செய்துகொள்ள அவர் விரும்பவில்லை என்று அர்த்தம்.
8. திருமணத்திற்கு பயம் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே பதட்டம், வியற்வை உண்டாகும். அடுத்த விஷயத்திற்கு தாவிவிடுவார்கள்.
9. சாக்கு சொல்வது நீங்கள் திருமணம் என்ற பேச்சை எடுக்கும் முன்னரே அவர் சாக்குபோக்கு சொல்வதற்காக 20 காரணங்களை தயார்செய்து வைத்திருப்பார்.
ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி மழுப்பிவிடுவார்.