Home ஆரோக்கியம் பொது மருத்துவம் பெண்கள் கருப்பை கட்டி இருந்தால் இந்த அறிகுறிகள் கவனியுங்கள்

பெண்கள் கருப்பை கட்டி இருந்தால் இந்த அறிகுறிகள் கவனியுங்கள்

163

பெண்கள் மருத்துவம்:20% பெண்களுக்கு உண்டாகும் நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது., அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுகிறது. அல்லது உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. சில நேரங்களில் இந்த நீர்க்கட்டிகள், கருப்பை பைப்ராய்டு, அல்லது மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்பு(வயிறு மந்தம் மற்றும் இடுப்பு வலி) ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு பாதிப்பைத் தருகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இந்த பகுதியில் அல்லது வேறு இடத்தில் திடீரென்று பாரமாக இருப்பது போல் நீங்கள் உணரலாம். உடற்பயிற்சியின் போது அல்லது பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உங்களால் உணர முடியும்.

கனமாக இருக்கும் அந்த பகுதியில் ஒருவித வலி தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் முடிந்த பின்னும் அந்த வலி நீடித்து இருக்கும். இந்த வலி மிகவும் அதிகமாகும்போது நீங்கள் கருப்பை முறுக்கத்தால் பாதிக்கப்படுவீர்கள். இந்த கட்டி வளர்ச்சியுற்று பெரிதாகும் போது தானாக முறுக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் வலி இன்னும் தீவிரமடைகிறது.

வயிறு வீக்கமடைவது என்பது ஒரு தெளிவற்ற அறிகுறி. அதன் அளவைச் சார்ந்து கருப்பை நீர்க்கட்டியுடன் இதனை தொடர்புபடுத்தலாம். பெரும்பாலான பெண்கள் 10செமீ க்கு குறைவான அளவு நீர்க்கட்டிகளைப் பெற்றிருக்கிறார்கள். அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிறில் வேறு எதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகும்.

கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும். “ஒரு நீர்க்கட்டி வயிற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து ஒரு அழுத்தத்தை தரும் உணர்வாகும். இது மலச்சிக்கல் போன்ற உணர்வைத் தரும். இரண்டு கருப்பையிலும் கட்டிகள் உள்ளவரை, இடுப்பின் ஒரு பக்கம் மட்டுமே இத்தகைய உணர்வு தோன்றும்.

சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது என்று டாக்டர்.சாப்மன் டேவிஸ் கூறுகிறார்.

தொற்று (ஆனால் சிறுநீர் வெளியேறாது). கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவதாகும். உங்கள் சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும் என்று அவர் கூறுகிறார். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.

உங்கள் இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம். அதாவது, இந்த கட்டிகள், இடுப்பின் பின்புறம் ஓடும் நரம்பை சுருக்கி விடுவதாக அவர் கூறுகிறார். உங்கள் இடுப்பு வலிக்கான காரணத்தை மருத்துவரால் அறிய முடியாவிட்டால், அது நீர்கட்டியின் ஆதாரமாக இருப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்