Home பெண்கள் அழகு குறிப்பு உங்கள் வியர்வையை துடைக்காமல்விட்டால் என்னாகும் தெரியுமா?

உங்கள் வியர்வையை துடைக்காமல்விட்டால் என்னாகும் தெரியுமா?

74

அழகு குறிப்பு:வெயில் காலத்தில் வியர்வையை துடைக்காமல் உடலில் அப்படியே காய வைப்பதால் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியர்வையை துடைக்காமல் காய வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பார்க்கலாம்.

வியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்:

கோடைக்காலம் என்பதால் அதிகமாக வியர்க்கும். அதிலும் என்ன தான் நன்கு குளிர்ச்சியான நீரில் குளித்துவிட்டு வந்தாலும், உடனே வியர்வை வெளியேற ஆரம்பிக்கும். அவ்வளவு மோசமான காலம் தான் கோடைக்காலம்.

கோடைக்காலத்தில் இப்படி வியர்க்கும் போது, அந்த வியர்வையை துடைக்காமல் உடலில் அப்படியே காய வைப்பதால் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இங்கு வியர்வையை துடைக்காமல் காய வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நன்கு வியர்த்து, அது அப்படியே உடலில் காயும் போது, ஒருவித அசௌகரியத்தை மற்றும் அரிப்பை சந்திக்கக்கூடும். ஏனெனில் வியர்வையானது அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை ஒன்று சேர்த்து, அரிப்பை உண்டாக்குகிறது.

வியர்வை உடலில் காயும் போது, அது ஆரம்பத்தில் அரிப்பை உண்டாக்கும். அந்த அரிப்பு அப்படியே நீடிக்கும் போது, அது பயங்கரமான தடிப்புக்களை ஏற்படுத்தும். பெரும்பாலும் இம்மாதிரியான நிலை உடலில் மடிப்புக்கள் உள்ள பகுதிகளில் தான் ஏற்படும்.

அதிகமாக வியர்வை வெளியேறும் போது, நம்மில் பலரும் ஃபேனிற்கு கீழே அமர்ந்து, வியர்வையை உலர்த்துவோம். ஆனால் இப்படி செய்யும் முன் மீண்டும் யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த செயலால் உடுத்திய ஆடையில் வியர்வை காயும் போது, அது நாள் முழுவதும் நம்மீது துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

வியர்வை அதிகம் வெளியேறி, அது அப்படி உடலில் காயும் போது, சருமத்தில் ஒருவித பிசுபிசுப்புத்தன்மையை ஏற்படுத்தும். அதோடு மிகுந்த அசௌகரியத்தையும் உணர வைக்கும்.

வியர்வை அளவுக்கு அதிகமாக வெளியேறும் போது, வியர்க்குரு வர ஆரம்பிக்கும். இதற்கு காரணம் வியர்வை உடலில் அப்படியே காயும் போது, அது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை உறிஞ்சி, வியர்க்குருவை உண்டாக்கும்.