Home பாலியல் சுய இன்பம் செய்தால் கெட்டவரா?

சுய இன்பம் செய்தால் கெட்டவரா?

36

சுய இன்பம் என்பது ஒரு சாதாரண விஷயம். ஒருவர் தனது பாலியல் இன்பத்திற்காக, செய்யக்கூடிய இயல்பான, சந்தோஷப்படுத்தும் ஒரு சாதாரண பாலியல் செயல்பாடுதான். ஆனாலும் சமூகம் இதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஒரு நபர் போதுவிலில்லாமல், தனியாக, செய்துகொள்ளும் ஒரு செயல். இதில் ஒருவர் யாரையும் கூட்டு சேர்த்துக்கொள்வதில்லை, யாரிடமும் இதைப் பற்றிக் கூறுவதில்லை, இருந்தும் இதைக் குறித்து பலருக்கு குற்ற உணர்ச்சி தொடரும்.

ஒருவருக்கு இந்தக் குற்ற உணர்ச்சி ஏற்படக் காரணம், தனது சமய நம்பிக்கைகளால் சுய இன்பம் என்பது குற்றம் என்ற கருத்து திணிக்கப்பட்டு அதை நம்புவதுதான். இந்தியாவில், இது தவறான செயல் என்று கருதப்படுகிறது. இது குறித்த குற்ற உணர்வும் வெட்கமும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.
பலர், ஒவ்வொரு முறை சுய இன்பம் செய்துகொண்ட பிறகும், சுய இன்பம் செய்துகொள்வது தவறு என்று நம்பினாலும், அதைச் செய்யும் உந்துதலைக் கட்டுப்படுத்த முடியாமல் செய்துவிட்டோமே என்று வெட்க உணர்வு கொள்வர். இதே தொடர்ந்து நீண்ட நாள் நடக்கும்போது, தன்னைப்பற்றிய அவருடைய சுய மதிப்பீடு குறைந்திருக்கும்.

டோப்பமைன் என்பது பிற நரம்பு செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பும் நியூரோடிரான்ஸ்மிட்டராகும். பாலியல் செயல்பாட்டின்போது டோப்பமைன் சுரக்கிறது, இதனால் இன்பமான ஒரு உணர்வு உண்டாகிறது. ஆனால் சுய இன்பம் செய்துகொண்ட பிறகு உடனடியாக டோப்பமைன் சட்டெனக் குறைகிறது என்று கூறப்படுகிறது. இந்த இன்பம் திடீரெனக் குறைவது கூட, ஒரு சிலர் வருத்தமடைய, குற்ற உணர்ச்சி அடையக் காரணமாக இருக்கலாம். இது ஒரு சிலருக்கு அதிக தீவிரமாக இருக்கலாம்.
சிலர், தங்கள் பிரச்சனைகள் அல்லது வாழ்வின் சிக்கல்களில் இருந்து தப்பிக்க ஒரு வழியாகவும் பாலியல் செயல்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதுபோன்றவர்கள் மீண்டும் யதார்த்த வாழ்க்கை முகத்தில் அறைந்தது போல் சவால்களை முன் வைக்கும்போது அந்தக் கணமே துவண்டு வருத்தமடைகின்றனர்.

இணையராக வாழ்பவர்களிலும் ஒருவர் எப்போதாவது சுய இன்பம் செய்து இன்பமுற நினைப்பதை, செய்வதை மற்றொருவர் தடுக்க முடியாது!இதுபோன்ற இணையர்களில், தன்னைவிட சுய இன்பமே அவருக்கு இன்பமளிக்கிறது என்ற எண்ணம் இணையரில் ஒருவருக்கு ஏற்பட்டால், உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். இருவரில் ஒருவரால் சுய இன்பப் பழக்கத்தை நிறுத்த முடியாவிட்டால் அதனாலும் அவருக்குக் குற்ற உணர்வு ஏற்படலாம்.