Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பாலியல் திறனை மேம்படுத்தும் சுத்த வஜ்ராசனம்

பாலியல் திறனை மேம்படுத்தும் சுத்த வஜ்ராசனம்

131

சுத்த வஜ்ராசனம் என்பது வஜ்ராசனத்தின் ஒரு மாற்று வடிவமாகும். இதில் உடலை பின்னோக்கி வளைத்து, முதுகு தரையில் படும்படி வைக்க வேண்டும். கைகள் உடலின் இரண்டு பக்கமும் தரையில் படும்படி இருக்கும், உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்கும்.

சுத்த வஜ்ராசனம் செய்யும் முறை (Step-wise instruction):

வஜ்ராசனத்தில் அமர்ந்துகொள்ளவும்
உள்ளங்கைகளை பிட்டங்களுக்கு பக்கவாட்டில் வைத்துக்கொள்ளவும், விரல்கள் முன்னோக்கி இருக்க வேண்டும்.
மெதுவாக முழங்கைகளை தரையில் அழுத்தி ஊன்றி, முதுகை பின்னோக்கி வளைக்கவும்.
தலையை பின்னோக்கித் தொங்கவிட்டு தரையில் படும்படி வைக்கவும்.
கைகளை குறுக்காக வைத்துக்கொள்ளலாம்.
அசௌகரியமாக இருந்தால், முழங்கால்களை சற்று அகட்டி வைத்துக்கொள்ளலாம்.
கண்களை மூடி, இயல்பாக சுவாசித்தபடி எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்தத் தோரணையில் இருக்கவும்.
மேலெழும்பும்போது கவனமாக எழும்பவும்.
மேலே வரும்போது, இடது முழங்கையில் பளுவைத் தாங்கி, இடது கையைப் பயன்படுத்தி எழுந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
மெதுவாக ஒவ்வொரு காலையும் விடுவித்து, கால்களை முன்னோக்கி நீட்டவும்.
இதே நிலையில் சிறிது நேரம் ஓய்வில் இருக்கவும்.
இதை முதலில் மூன்று முறை செய்யலாம், பிறகு படிப்படியாக எண்ணிக்கையை ஐந்து வரை அதிகரிக்கலாம்.
பலன்கள் (Benefits):

உடலுக்கு:

இது வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு மசாஜ் விளைவை அளித்து, முதுகுத்தண்டை நீளச் செய்கிறது.
தைராய்டு பிரச்சனைகள் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிக நல்லது.
கால்கள் மற்றும் தொடைகளை பலப்படுத்துகிறது, தியானத்திற்குத் தயார்ப்படுத்துகிறது.
இது பாலியல் திறனை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
மனம்:

மனதை அமைதிப்படுத்துகிறது.
உணர்வுரீதியாக:

இந்த ஆசனம் கோபம், முரட்டுத்தனம் ஆகியவற்றைக் குறைத்து, உணர்ச்சிரீதியான நிலைத்தன்மையை அதிகரிக்கிறது.
யாரெல்லாம் செய்யக்கூடாது? (Contra-indications):

சாப்பிட்ட பிறகு இதனைச் செய்யக்கூடாது.
உயர் இரத்த அழுத்தம், முதுகுத்தண்டில் வட்டு விலகியவர்கள், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், மாதவிடாய் நாட்களில் உள்ள பெண்கள், கர்ப்பமான பெண்கள் ஆகியோர் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.