பார்ன் என்பதும் ஒரு தொழில் தான், என்னை விபச்சாரி மாதிரி பார்ப்பதை நிறுத்துங்கள் என ஒரு பேட்டியில் கண்ணீர் மல்க கூறியிருந்தார் சன்னி. சரி, இப்போது நடிக்க வந்த பிறகும் பார்வையாளர்கள் அதே கண்ணோட்டத்தில் பார்க்க காரணம், இப்போதும் சன்னி அதே போன்ற கதைகளை தேர்வு செய்வது தான்.
தொடர்ந்து இவர் நடிக்கும், நடித்து வெளியான படங்கள் யாவும் இவரை ஒரு காட்சிப்பொருளாக பயன்படுத்தி வியாபாரம் செய்யப்படுபவை தான். பார்ன் என்பதை தாண்டி வந்த பிறகும் சன்னி சில தவறுகள் செய்து தான் வருகிறார்….
ஐட்டம் கதாபாத்திரங்கள்! ஏற்கனவே பார்ன் படங்களில் துகிலுரித்து வந்தவர் தான். பிறகு மீண்டும் இவரை கவர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்வதில் எந்த பயனும் இல்லை. இதை சன்னியும் உணர வேண்டும். நடிப்பில் உண்மையிலேயே ஆர்வம் இருந்தால், அதில் திறமை காட்டுவதே நல்லது.
கற்றுக்கொள்ள வேண்டும்! நிஜமாகவே நடிப்பில் சிறக்க வேண்டும் என்றால் சன்னி தயவு செய்து நடிப்பு கிளாசுக்கு போகலாம். இவரை வைத்து எடுக்கப்படும் விளம்பரங்கள் கூட அந்த மாதிரி தான் எடுக்கபப்டுகின்றன.
நைட் பார்ட்டி! நடிப்பு என்ற தொழிலுக்குள் வந்த பிறகு மீண்டும் ஒருசில நைட் பார்டிகளில் ஆடைகள் அவிழ்த்து சன்னி நடனம் ஆடியதாக பல படங்கள் வெளியாகின. இதை சன்னி தவிர்த்திருக்க வேண்டும்.
குச் குச் லோச்சா ஹை! குச் குச் லோச்சா ஹை என்ற இந்தி படத்தில் சன்னி நடித்திருந்தார். இதைவிட ஒரு கேவலமான படம் இல்லை என்றே கூறும்படி இருந்தது. உலக சினிமா ரேட்டிங் தளமான IMDb இதற்கு வெறும் மூன்று மதிப்பெண் கொடுத்திருந்தது.
ஏக் பஹீலி லீலா! இது சன்னி செய்த இரண்டாவது பெரிய தவறு. ட்ரைலரில் ஒரு மாதிரியும், திரையில் வேறு ஒரு மாதிரியாகவும் இருந்தது கதை. ஒட்டு மொத்தமாக கதையின் நாயகியை சுயநலத்திற்காக பயன்படுத்தியது மாதிரியே இருந்தது.
ஜாக்பாட்! இதுவும் சன்னி நடித்த வேண்டாத படங்களில் ஒன்று. இதற்கு IMDb 2.3 மதிப்பெண் அளித்திருந்தது.