சூடான செய்திகள்:செக்ஸி வைட்டமின் என வைட்டமின் டி அழைக்கப்படுகிறது. இந்த வைட்டமின் எப்படி பெறுவது, அதற்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம் என பார்ப்போம்.
செக்ஸில் பிரச்னை ஏற்படுகின்றது என்றால் அதன் தொடக்கம் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைதல் தான். அப்படியே விரைப்பு ஏற்பட்டாலும் குறைந்த நேரத்தில் விரைப்புத்தன்மை இழப்பதும் காரணமாக இருக்கின்றது.
வைட்டமின் டி செக்ஸ் பிரச்னையில் ஆண்களுக்கு மட்டுமில்லாது, பெண்களுக்கும் மிகுந்த பயனைத் தருகின்றது.
பெண்களுக்கு செக்ஸில் ஈடுபட தூண்டும் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் குறைவு பிரச்னையை சரிசெய்வதிலும், ஆண்களுக்கான செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஈஸ்ட்ரோஜன் ,டெஸ்டோஸ்டிரான் குறைவதால் செக்ஸில் பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னைகளை தீர்ப்பதோடு, செக்ஸுக்கான அந்த மனநிலையை ஏற்படுத்துவதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.
எப்படி பெறுவது:
வைட்டமின் டி நாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இயற்கையாக காலையில் அடிக்கும் சூரிய வெயிலில் நின்றாலே போதுமானது. அதிலும் நாம் உடலில் எண்ணெய் தேய்த்து சூரிய ஒளியில் நின்றால் இந்த வைட்டமின் டி சிறப்பாக கிடைக்கும்.
இதனால் தான் முன்னோர்கள் எண்ணெய் குளியல் போடும் போது சிறிது நேரம் வெயிலில் நிற்கச் சொல்வது வழக்கம். ஆனால் தற்போதைய காலத்தில் இது பழங்கதை என ஒதுக்கி விட்டோம்.
உணவுகள்
மீன், முட்டை, ஆரஞ்சு, சோயா, பால், கீரைகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் டி நிறைந்து கிடக்கின்றது.
வைட்டமின் டி உணவுகள் நாம் எடுத்துக்கொண்டால் செக்ஸில் சிறப்பாக செயல்படமுடியும்.