பெண்கள் அழகு கூந்தல்:கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது போன்று கூந்தல் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெப்ப தாக்கம் கூந்தலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். முடி உதிர்வு, முடி வெடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். கோடைகாலத்துக்கு அவசியமான கூந்தல்
பராமரிப்பு வழிமுறைகள்:
* கோடையில் சூரிய கதிர்கள் நேரடியாக கூந்தலைத்தாக்கும். அதனால், குளித்ததும் கூந்தலை உலர வைப்பதற்கான டிரையரை கோடைகாலத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதுவும் வெப்பத்தை உமிழ்வதால் கூந்தலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுவிடும்.
* கோடை காலத்தில் வெளியே செல்லும்போது தலையில் தொப்பி அணிந்துகொள்ளலாம். அல்லது துணியால் தலையை மூடிக்கொள்ளலாம். அதன் மூலம் உச்சந்தலையில் கூந்தலுக்குரிய இயல்பான ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். வெப்பக்காற்றினால் கூந்தல் சேதம் அடைவதையும் தவிர்க்கலாம்.
* இறுக்கமான சிகை அலங்காரம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கூந்தலை தளர்வாக பின்னிக்கொள்வதே நல்லது. இறுக்கமாக இருந்தால் கூந்தலில் வியர்வை படிந்து சூரிய கதிர்களின் தாக்கத்தால் முடி சேதமடைந்துவிடும்.
* கடற்கரை, நீச்சல் குளம் போன்ற இடங் களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினால் உடனே கூந்தலை கழுவ வேண்டும்.
* கூந்தலை சீவுவதற்கு பரந்த பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்த வேண்டும். பிரஷ் வைத்து கூந்தலை அலங்கரிப்பதை தவிர்க்க வேண்டும்.
* தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. மயிர்கால்கள் வரை ஆழமாக ஊடுருவும்படி எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். குளியலுக்கு தரமான ஷாம்புகளையும் பயன்படுத்த வேண்டும்.