கர்ப்பம் என்பது யாருடைய வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நேரமாகும். புது வாழ்க்கைக்கு தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்தும். கருவுற்ற ஒன்பது மாதத்தில், நீங்கள் நன்றாக சாப்பிட்டு நன்றாக உறங்கியிருப்பீர்கள். உங்களை வருங்கால தாயாக நினைத்து மகிழ்ந்திடுவீரகள். உங்கள் சுகப்பிரசவம் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் சரி, உங்கள் குழந்தையை உங்கள் அருகில் வைத்திடும் போது நீங்கள் பட்ட வேதனையும் கஷ்டமும் பறந்தோடும். இருப்பினும் சுகப்பிரசவம் ஏற்படும் போது சில சிக்கல்களும் பிரச்சனைகளும் உண்டாகும். சுகப்பிரசவம் ஏற்பட்ட பிறகு, அதற்கு பின் வரும் காலங்களை கவனமுடன் கையாளுவது மிகவும் முக்கியம். சுகப்பிரசவம் ஏற்படும் போது அதில் சில நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. சுகப்பிரவத்தினால் ஏற்படும் சில பொதுவான பிரச்சனைகளை கீழே விளக்கியுள்ளோம்.
ஆனால் உங்களை பயமுறுத்துவதற்காக இதனை நாங்கள் சொல்லவில்லை. பெண்ணுறுப்பில் புண் சுகப்பிரசவம் ஏற்படும் போது உங்கள் பெண்ணுறுப்பின் திசுக்கள் கிழியவோ காயம் ஏற்படவோ வாய்ப்புகள் உள்ளது. அதனால் அந்த இடத்தில் புண் ஏற்பட்டு மிகவும் மென்மையாக மாறும். இந்த புண்ணை ஆற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு பின் ஏற்படும் சிக்கல் வகைகளில் இதுவும் அடங்கும். தொற்று சுகப்பிரசவத்திற்கு பின் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக விளங்குகிறது தொற்றுக்கள்.
குழந்தை பிறப்பின் போது, பெண்ணுறுப்பில் கிழிவு ஏற்படுவதால், தொற்றுக்கள் உண்டாகும். பொதுவாக இந்த தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்க ஆண்டி-பையாடிக்ஸ் அளிக்கப்படும். இரத்தக்கசிவு சுகப்பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் அதிகமான இரத்தக்கசிவு என்பது இன்னமும் நிகழ்கிற ஒரு முக்கியமான சிக்கலாகும். அது ஒழுங்காக நிற்கவில்லை என்றால் பெண்ணுறுப்பு கிழிந்த இடத்தில் இரத்தம் தேங்கி, நாளடைவில் அது இரத்தக்கட்டியை உண்டாக்கி விடும். மீண்டும் தையலிடுவது பெண்ணுறுப்பு கிழிவதால் ஏற்படும் சிக்கல் இது. சுகப்பிரசவத்தின் போது, பெண்ணுறுப்பின் கிழிவில், இரத்தக்கட்டி ஏற்பட்டால்,
நிலைமை இன்னமும் மோசமாகி விடும். சில நேரம் இந்த கிழிவு மீண்டும் பிரிந்து இரத்தம் தேங்கி விடும். கர்ப்பவாய் ஆற்றல் குறை சுகப்பிரசவத்தின் போது ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. பிரசவத்தின் போது, கர்ப்பவாய் பாதிப்படைந்து வலுவிழக்கும். இதனால் கர்ப்பவாய் ஆற்றல் குறை என்ற நிலை ஏற்படும். வருங்காலத்தில் கர்ப்பம் தரிக்கும் போது இது பல சிக்கல்களை உண்டாக்கும். சிறுநீர் கழிப்பதில் சிக்கல்கள் சுகப்பிரசவத்திற்கு பின் ஏற்படும் இவ்வகையான பிரச்சனைகள் தானாக சரியாகி விடும். பிரசவமான உடனேயே சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்படும். அதற்கு காரணம், மென்மையான கழிவிட பகுதி மற்றும் நீர்ப்பையை சுற்றியுள்ள தசைகளில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் புண்களில், சிறுநீர் படும்போது அந்த இடங்கள் கடுக்கும்.
கழிவு அடக்காமை சுகப்பிரசவத்திற்கு பின் ஏற்படும் சிக்கல்களில் ஒன்றானது கழிவு அடக்காமை. காலங் கடத்து ஏற்படும் பிரசவத்தால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை தான், சிறுநீர் மற்றும் மலம் அடக்காமை. குழந்தைக்கு சிக்கல் பிரசவத்தின் போது குழந்தையின் அமைப்பு நிலையினால் கூட சுகப்பிரசவத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். பொதுவாகவே குழந்தையின் தலை, கீழ் நோக்கி தான் இருக்க வேண்டும். இது அல்லாமல் வேறு எந்த நிலையில் இருந்தாலும் பிரச்சனையே. இயந்திர முறையால் சிசுவிற்கு காயம் சிசுவிற்கு ஏற்படும் உடற்சார்ந்த காயங்களும் கூட சுகப்பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களில் ஒன்றாகும். குழந்தையின் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது தாயின் உடல் எடை அதிகமாக இருந்தாலோ இந்த சிக்கலுக்கான இடர்பாடுகள் அதிகம். ஆனால் நீண்ட கால தீங்கை ஏற்படுத்தாமல் இப்பிரச்சனைகள் நீங்கும்.