உடலில் `குப்’ பென்ற சூடும், அது உடலில் முகத்தில் ஏறுவதும், கன்னம் சிவப்பதும், நெஞ்சு படபடத்து வெளியே வந்து குதிப்பதை போன்ற உணர்வினை ஏற்படுத்துவதும் மாத விடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள். இதைத் தவிர கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருக்கும். இவை மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் கொஞ்ச கால முன்பிருந்தே ஆரம்பிக்கலாம்.
* அலர்ஜி சில பெண்களுக்கு நிறுத்தத்திற்கு மன்பாகவே சில `அலர்ஜி’ வெளிப்பாடு இருக்கும். (2-ம்) மசாலா உணவு, காபி, சென்ட்.
* மன வேகம் : கணவரோடு சண்டை போடும் பெண்கள் இக்கால கட்டத்தில் அதிகம். மனது எதனையும் சந்தேகத்தோடும், தவறாகவும் பார்க்கும்.
* உப்பிசம்: இது வயிறு உப்பிசம் என்று பெயர். உடலே ஏதோ ஊதி விட்டது போல இருக்கும்.
* மார்பக வலி: மார்பகங்களில் வலி இருக்கும்.
* உடையும் நகம்: ஹார்மோன் மாறுபாடு உடலில் ஏற்படுவதற்கு காரணமாக கால், கை விரல் நகங்கள் எளிதில் உடையும்.
* மனச்சோர்வு: எதையோ பறிகொடுத்தது போன்ற ஒரு வேதனை, மன வலி, அழுகை இருக்கும்.
* உடல் நாற்றம்: இக்கால கட்டத்தில் அதிக வியர்வை ஏற்படும். அதனால் உடல் வியர்வை வாடையில் கூட வித்தியாசம் இருக்கும்.
* நாக்கு எரிச்சல்: ஹார்மோன் மாறுபடுகளால் பல வகை வெளிப்பாடுகள் இருக்கும். அதில் சிலருக்கு நாக்கு எரிச்சல், வலி, வாய் முழுவதிலுமே வலி, எரிச்சல் இருக்கும்.
* அடிக்கடி தலை சுற்றி மயக்கம் வருவது போல் இருக்கும்.
* சிலர் சருமத்தின் அடியில் ஏதோ `கரண்ட் ஷாக்’ போல் கூறுவர்.
* சிலருக்கு அதிக மறதி, எதிலும் கவனமின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும். எது சொன்னாலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாதது போல் தோன்றும்.
* உடல் சோர்வு மிக அதிகமாக இருப்பதாக கூறுவர். எப்பொழுதும் படுத்துக் கொண்டே இருப்பர்.
* வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப் பிரட்டல் இருக்கும்.
* சிலருக்கு ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.
* தலைமுடி கொட்டும். முடி மெலிதாகும். உடலில் உள்ள முடி குறைந்து மெலிதாகும்.
* முகத்தில் முடி அதிகம் தோன்றும்.
* அடிக்கடி தாங்க முடியாத தலைவலி வரும்.
* சிறுநீர் வெளி கசியும். சிறுநீர் அடிக்கடி அவசரமாக போக வேண்டிய உணர்வு ஏற்படும்.
* நெஞ்சு `தடதட’வென்றே இருக்கும்.
* மாத விடாய் நிறுத்தம் முன்பு தாறுமாறான மாத விலக்கு ஏற்படும்.
* யாரிடமும் சிறிய விஷயத்திற்கெல்லாம் எரிந்து விழுவர்.
* மூட்டு வலி ஆரம்பிக்கும்.
* உடலுறவு ஆசை குறையும் அல்லது இராது.
* திடீரென கலகலவென சிரித்து பேசுவர். திடீரென கதறி அழுவர்.
* அப்போதும் சதை வலி, உடல் வலி என்று இருக்கும்.
* எலும்பு தேய்மானம் கூடி சிறுநீரில் எலும்பு கரைத்து வெளியேறும்.
* இரவில் அதிகம் வியர்த்து கொட்டும். தூக்கம் கெடும்.
* உடலில் ஏதோ பூச்சி ஊறுவது போல இருக்கும்.
* எடை கூடும்.
இவை அனைத்துமே எல்லோருக்கும் இருக்கும் என்பதில்லை. சில மட்டுமே இருக்கலாம். இதனை தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பயப்படாமல் `மாத விடாய் நிறுத்தத்தினை எதிர்கொள்ளலாம்.