நம்மில் பலருக்கும் வேண்டாத ‘வளர்ச்சி’யாய் தொப்பை இருக்கிறது. அதற்கு, நமது வாழ்க்கை முறை மட்டுமின்றி, உண்ணும் உணவுகளும் ஒரு காரணம்.
வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் கரைக்க, தண்ணீர், வெள்ளரிக்காய், எலுமிச்சம்பழச்சாறு, புதினா, இஞ்சி கலந்த ‘ஜூஸ்’ உதவும். இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து, உடற் பயிற்சி செய்து வந்தால் தொப்பை கரையும்.
சரி, இந்த ஜூஸில் இடம்பெறும் பொருட்களில் என்னென்ன சத்துகள் அடங்கியிருக்கின்றன என்று தெரியுமா?
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம். அதோடு, உடலின் அல்கலைன் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.
எலுமிச்சம்பழச்சாறில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இது, உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.
புதினா, வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது.
இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்யக்கூடியதாகும்.
தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின்போது தசை மற்றும் மூட்டுகளில் தொய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து பருகிவந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.