Home ஆரோக்கியம் பொது மருத்துவம் தொடங்கியாச்சு கோடைக்காலம்.. எளிதாக சமாளிக்க ஈஸி டிப்ஸ் இதோ.!

தொடங்கியாச்சு கோடைக்காலம்.. எளிதாக சமாளிக்க ஈஸி டிப்ஸ் இதோ.!

26

கோடைக்காலம் துவங்க உள்ளது. எங்கு சென்றாலும் அனல் காற்று அடிக்கும். சருமமும், தலை முடியும் கோடைக் காலத்தில் அதிகமாக பாதிக்கப்படும். எனவே, கோடைக்கு என சில விசேஷ கவனிப்புகளை நாம் செய்ய வேண்டியதிருக்கும். இல்லையெனில் இந்த கோடை முடிவதற்குள் நமது சருமமும், தலை முடியும் அதன் ஆயுளை முடித்துக் கொள்ளும் என அச்சம் கொள்கிறவர்களா நீங்கள். அப்படியான உங்களுக்காக கோடைக்கேற்ற சில குறிப்புகள் இங்கே..

வெயிலில் சருமம் கருக்காமல் இருக்க :

குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.

உடல் சூடு தணிய :

தயிரில் ஊற வைத்த வெள்ளரித் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சூடும் குறையும்.

கண் கருவளைம் :

கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க, விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவி வந்தால் கருவளையும் காணாமல் போகும்.

துர்நாற்றம் போக :

குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வெப்பமூட்டி அந்த நீரல் குளித்து வந்தால் துர்நாற்றம் குறையும்.

கண்களைக் காக்க :

வெளியில் காயும் அனல் உங்கள் கண்களை பாதிக்காமல் இருக்க வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைத்துப் பத்து நிமிடம் அமர்ந்திருங்கள். கண்கள் மெருகேறும்.

கூந்தல் பராமரிப்பு :

வாகனத்தில் போகும் போது தலையில் ஸ்கார்ப் அல்லது தொப்பியாவது அணியுங்கள். அடி முடியில் வெயில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் மீதமிருக்கும் சாதத்தில் ஊற்றி வைத்திருக்கும் நீரைக் கொண்டு காலையில் உங்கள் கூந்தலை அலசுங்கள். அப்படி செய்தீர்கள் எனில் கவிபாடும் உங்கள் கூந்தல்.

ஆரோக்கியத்திற்கு :

ஒரு ஸ்பூன் தேனும், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.