Home சூடான செய்திகள் எப்போதெல்லாம் பொய் சொல்றாங்க? ஆய்வில் அதிரடி தகவல்

எப்போதெல்லாம் பொய் சொல்றாங்க? ஆய்வில் அதிரடி தகவல்

20

ஜேர்மானியர்கள் எந்தெந்த விடயத்தில் எப்போதெல்லாம் பொய் கூறுகிறார்கள் என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் ஆராய்ச்சி நிறுவனம் Forsa நடத்திய இந்த ஆய்வில் பல ஆச்சர்யமளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகளில், ஜேர்மானியர்களில் 11 சதவிகிதம் பேர் விடுப்புக்காக தங்கள் முதலாளியிடம் ஒருமுறையேனும் பொய் சொல்லியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

9 சதவிகிதத்தினர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

மற்றொரு 8 சதவிகிதத்தினர், சில்லரை எடுக்கவேண்டிய சமயங்களில் தனக்கான பணத்தை விட அதிகளவில் எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

4 சதவிகித மக்கள் வரி விடயங்களில் பொய் கூறியுள்ளதாகவும், 2 சதவிகிதத்தினர் காப்பீட்டு நிறுவனங்களிடம் பொய் கூறியுள்ளதாக ஒப்புகொண்டுள்ளனர்.

மேலும், 51 சதவிகித மக்கள் தாங்கள் நேர்மையானவர்கள் என்றும் கடைசியாக எப்போது பொய் கூறினோம் என்று நினைவில்லை எனவும் தெரிவித்துள்ளன