1.விந்து ஒட்டக்கூடிய வழவழப்பான தண்ணீர், சளி போன்ற ஒரு திரவம்,
2.விந்தின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள். அல்லது சாம்பல்,
3.விந்து வெளியாகும் போது அது கெட்டியாக இருக்கும். வெளி வந்த பிறகு நீர்த்துப் போய்விடும்
4.விந்து, விதையில் உள்ள குழாய்களில் உற்பத்தியாகிறது. இந்தக் குழாய்கள் 500 மீட்டர் நீளமுள்ளவை. உயிரணு உற்பத்தியாக 70 நாட்கள் ஆகும்.
5.ஒரு விந்தணு மூன்று பாகங்களைக் கொண்டது. தலை, இடை, வால் என்பது அந்த மூன்று பகுதிகள். இதன் தலைப்பகுதி அக்ரோசோம் எனப்படுகிறது. இங்கு தான் இதன் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் தான் விந்தணு நீந்திச் சென்று கரு முட்டையை அடைய முடிகிறது.
6.விந்தணுக்கள் உற்பத்தியானதும் பல வாரங்கள் விதைகளின் பிற்பகுதியில் உள்ள சுருண்ட குழாய்களில் தங்கி இருக்கும். அவை முதிர்ச்சி அடைந்த பிறகு விதையில் உள்ள குழாயிலிருந்து புறப்பட்டு ப்ரோஸ்டேட் எனப்படும் விந்துப்பையின் உள்ளே சென்று தங்கும்.
7.இந்த விந்துப்பையானது சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள தசை அமைப்பு சிறுநீர் கழித்தலும் விந்து வெளியேற்றமும் ஒரே சமயத்தில் நேரா வண்ணம் தடுக்கிறது. ரெக்டம் எனப்படும் குதம் விந்துப்பையின் பின் புறத்தில் அமைந்துள்ளது. ஆகவே ஆசனவாய் வழியாக விந்துப்பையையும் பரிசோதனை செய்யலாம்.
8.விந்துப்பை ஒரு விதத் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்தத் திரவத்தின் ஊடே தான் விந்தணுக்கள் உச்சக்கட்ட இன்ப நிலையின் போது பெண் குறியின் உள் பீய்ச்சி அடிக்கப்பட்டுக் கருப்பையைச் சென்று அடைகிறது. விந்துப்பையானது குறைந்தது 30 சதவிகிதம் தான் விந்தை உற்பத்தி செய்யும். மற்ற 70 சதவிகிதம் விந்து நீர்க்குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.
9.ஒரு முறை வெளியாகும் விந்தின் அளவு 5.மி.லி ஆகும். ஒரு மில்லி லிட்டர் விந்தில் 4 முதல் 12 கோடி விந்தணுக்கள் உண்டு. அதாவது ஒரு முறை வெளியிடும் விந்தில் 12 முதல் 60 கோடி விந்தணுக்கள் உள்ளன.
10.ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் எனக் கற்பனையில் நினைத்துப் பார்க்கவே இயற்கையின் அற்புதத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?
11.விந்தணுக்களுக்கு ஆற்றல் தரும் ரசாயனப் பொருட்களும் இதில் அடக்கம். ஆண் குழாய்களிலும், பெண் குழாய்களிலும் உள்ள அமிலங்களை எதிர்த்து உயிர் வாழக்கூடிய ரசாயனமும் இதில் உள்ளது.
12.மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும். ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.
13.குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண் குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது