Home ஆரோக்கியம் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் 5 வகையான கீரை வகைகள்!

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் 5 வகையான கீரை வகைகள்!

415

ஆண்களின் ஆண்மை:தவறான உணவு பழக்க வழக்கங்களால் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. ஆனால், அது பற்றி கவலைப்பட தேவையில்லை என்று கூறும் வகையில், ஆண்மையை அதிகரிக்க இந்த 5 வகையான கீரை வகைகள் பயன்படுகிறது.

சரியான தூக்கம், உணவுப் பழக்க வழக்கம், தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவது, போதுமான உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், வேலைப்பளு என்று தொடர்ந்து மன நிம்மதி இல்லாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் தாம்பத்ய வாழ்க்கை முறை கூட பெருமளவு பாதிக்கப்படுகிறது.

இதன் விளைவாக கணவன் மற்றும் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடைசியில் விவாகரத்து வரை செல்கின்றனர். இதற்கெல்லாம், தீர்வு காணும் விதமாக அப்போவே சித்தர்கள் பின்வரும் உணவு முறைகளை வகுத்துள்ளனர். அந்த உணவு முறைகள் என்ன என்று இப்போது பார்க்கலாம்.

நறுந்தாளி நன்முருங்கை தூதுவளை பசலை, வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் பின்வாங்கி கேள். இதில், நறுந்தாளி என்பது தாளிகீரையை குறிக்கும்.

நன்முருங்கை முருங்கையை குறிக்கிறது. அடுத்துள்ள தூதுவளை, பசலைக்கீரை, அரைக்கீரை ஆகிய 5 வகையான கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.