ஆண்கள் Pant Pocket -ல் செல்போன்களை வைப்பதால் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் வீரியம் sperm-quality குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கால்சட்டைப் பாக்கெட்டில் Cellphone வைப்பதால் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். பெண்களுடனான உடலுறவிலும் வீரியம் குறைவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
cell-phones-in-trouser-pocket-may-reduce-sperm-quality
பிரிட்டனில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை செய்த விஞ்ஞானிகள் குழுவானது 1492 ஆண்களின் விந்தணுக்களை – sperm எடுத்து பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வின் முடிவில் செல்போன்களில் இருந்து உருவாகும் வெப்பம் மற்றும் மிக்காந்த அலைகளும் கதிரியக்கமும் மனிதர்களின் விந்தணு உற்பத்தி, செயல்படும் தன்மை ஆகியவற்றை பாதிப்பதாக இந்த ஆய்வின் தலைவர் மாய்யூஆஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற விஞ்ஞானிகள் இந்த ஆய்வின் முடிவுகளை மறுத்து உள்ளனர். அவர்கள் இந்த ஆய்வு முழுமையானது அல்ல என்றும், குறிப்பிட்ட ஆண்களின் பழக்க வழக்கங்கள், உணவு முறை மற்றும் அவர்கள் உட்கொண்ட மருந்துகள் போன்றவையும் விந்தணு உற்பத்தி குறைவானதற்கு காரணமாக – sperm-quality இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
செல்போனை கால்சட்டை பையில் வைப்பதால் மட்டுமே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இறுதியாக ஆய்வின் முடிவுகள் போதுமானதாக இல்லை, இன்னும் ஆழமாக மேற்கொள்ளப்பட வேண்டியவை என்று அவர்கள் தெரிவித்தனர். செல்போன் ஏற்படுத்தும் வெப்பம், கதிர்வீச்சு ஆகியவை விந்தணுக்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்விற்கு தலைமை தாங்கிய மாத்யூஸ் தெரிவித்துள்ளார்.