Home ஆண்கள் இதை தினம் செய்தல் ஆண்மை பலம் உங்களுக்கு அதிகரிக்கும்

இதை தினம் செய்தல் ஆண்மை பலம் உங்களுக்கு அதிகரிக்கும்

767

நாள்தோறும் தவறாமல் யோகா பயிற்சிகளை செய்து வந்தால் ஆண்களின் உயிரணுக்களின் தரம் உயர்ந்து ஆண்மை பலம் அதிகரிக்கும் என்று டெல்லி எண்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவந்துள்ளது.

குறைபாடுள்ள உயிரணுக்கள் காரணமாக ஆண்களுக்கு மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆரோக்கியமான குழந்தை உருவாக, வீரியமுள்ள மரபணு உயிரணுக்கள் தேவைப்படுகின்றன.

ஆண்களுக்கான மலட்டுத் தன்மைக்கு, குழந்தை பிறக்காத நிலைக்கு விந்தணுக்கள் பாதிப்பு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த பாதிப்பு உள்ள ஆண்களின் உயிரணுக்கள் மூலம் கரு தரித்தால், அது நிலைக்காது, கரு கலைந்து விடும்.

அப்படியே தரித்தாலும், குழந்தைகளுக்கு மரபணு குறைபாடுகள் காரணமாக பல்வேறு உடல் பகுதி வளர்ச்சியின்மை இருக்கக் கூடும். மரபணு பாதிப்பால், ஆண்களின் உயிரணுக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

இந்த பாதிப்புக்கு சுற்றுச்சூழல், பூச்சி மருந்துகள், ரசாயன பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் தாக்கம், மின்காந்த கதிர்வீச்சு, நோய் தொற்று, புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன், நுண் ஊட்ட சத்துகள் இல்லாத துரித உணவுகள் காரணகின்றன என்று அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தையும் தவிர்க்க வாழ்வியல் முறையில் ஒரு சில மாற்றங்களை கடைபிடித்தால், இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உடற்கூறியியல் துறை பேராசிரியர் டாக்டர் ரீமா தாதா தெரிவித்துள்ளார்.

அது என்ன மாற்றம் என்பதையும் ரீமா தாதா தெரிவித்துள்ளார். அதன்படி தினமும் யோகா பயிற்சிகளை மேற்கொண்டால் மரபணு பாதிப்பு குறைகிறது என்றும் , தொடர்ந்து 6 மாதங்கள் யோகா பயிற்சி செய்த 200 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 21 நாட்களில் அவர்களின் உயிரணுக்களில் பாதிப்பு குறைந்து வருவதை கண்டுபடிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களில் மரபணுவின் தரம் உயர்கிறது, உயிரணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை, வீரியம், வேகம் அதிகரித்திருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்ட ரீமா தாதா, யோகாவினால் வயதாவது தள்ளி போகிறது என்றும் கூறினார்.