ஆண்மை பெருக்கம்:மன இறுக்கம் உளவியல் உடலியல் போன்ற பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. இவை விந்தணு உற்பத்தியையும் பாதிக்கின்றது.
இந்த விந்தணு உற்பத்தி பிரச்சனைகளால் குழந்தை பிறப்பு, கருத்தரிப்பு தடைபடுதல் போன்ற பிரச்சனைகளை கண்டறிய முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
விந்தணு பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா?
இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.
#விந்தணு_பரிசோதனை #செய்யும்_முறை
பரிசோதனை மேற்கொள்ளும் இரண்டு நாட்களுக்கு முன் மனைவியுடனான உடலுறவை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பரிசோதனைக்கு ஒரு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.
குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது கீழே கொட்டாமல் மருத்துவரிடம் கொடுக்க வேண்டும் அப்படி கீழே சிறிதளவு கொட்டினால் அதன் விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
#_விந்து_திரவத்தில் #பரிசோதிக்கப்படுபவை.?
* விந்து திரவத்தின் அடர்த்தி
* விந்தணுக்களின் எண்ணிக்கை
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்
* இயல்பான உயிரணுக்கள்
* பாக்டீரியா
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.
ஒவ்வொரு மில்லி #விந்தணுவிலும்_4_கோடி #உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் கருத்தரித்தலில் பிரச்சனை வரும்.
ஆனால் சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விந்தணுவில் ஊர்ந்து செல்லும் அணுக்கள்
40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.
விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.
விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால் அவை அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றும்.
சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், #கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.
அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.