பல தம்பதிகளுக்கு பொதுவாக கருத்தரிப்பு என்பது எளிதாக நடந்து விடுகிறது. அந்த வகையில் கருத்தரிப்பைப் பற்றி எந்த பெரிய ஆய்வும் இருப்பதில்லை.
ஆனால், கருத்தரிக்காத தம்பதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் போதுதான், கருத்தரிக்க எத்தனை விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று வியப்பை அளிக்கிறது.
பொதுவாக கருத்தரிப்பு நிகழ வேண்டும் என்றால், ஆணின் விந்தில் 20 மில்லியன் உயிரணுக்கள் இருக்க வேண்டும். அதில் 70 சதவீதத்திற்கு மேலானவை உயிருடன் இருக்க வேண்டும்.
அதில் ஐம்பது சதவீதமாவது ஊர்ந்து செல்லும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை அளவு குறையும்பட்சத்தில்தான் கருத்தரிப்பு கேள்விக்குறியாகிறது.
ஆண்களுக்கு உயிரணு எண்ணிக்கைக் குறைவாக இருப்பது, ஏன் சிலருக்கு உயிரணுவே இல்லாமல் இருப்பது கூட பிரச்சினைதான். ஆனால் எப்படி இருந்தாலும்தற்போதைய மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியோடு குழந்தைப்பேறு சாத்தியமாகிறது.