விபச்சாரம் என்பது பணத்திற்காக உடலை விற்கும் தொழிலாக தான் பார்க்கிறோம். எந்நிலையில் பெண்கள் அங்கு செல்கிறார்கள், எவ்வாறு அழைத்துவரப்படுகிறார்கள், அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் என்ன? என்பது பற்றி நூற்றில் ஒரு சதவீதம் கூட நாம் அறிந்திருக்க மாட்டோம். அதை முழுக்க உங்கள் கண்முன் கொண்டு நிறுத்தும் இணையம் தான் கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ்…
சொர்கத்தின் மகள்கள் என்ற அர்த்தம் கொண்ட “கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ்” என்ற பெயரில் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டது. அதில் செக்ஸியாக உடையணிந்த பெண்களின் புகைப்படங்கள் பாலியல் தொழிலாளிகள் என்ற பெயரில் இடம் பெற்றிருந்தன. அத்துடன் அவரவரது மாதவிடாய் நாட்களும் குறிக்கப்பட்டிருந்தன.
அந்த இணையத்தில் நீங்கள் ஒரு பெண்ணை தேர்வு செய்தால், உடனே ஒரு செட் ஓபனாகும். அதில் அந்த பெண்ணுடன் நீங்கள் உரையாடும் வகையில் இணையத்தளம் டிசைன் செய்யப்பட்டிருந்தது.
செட் உச்சத்தை அடையும் போது மிகவும் கொடுமைக்குள்ளான நிலையில் அந்த பெண்ணின் புகைப்படம் ஒன்று திரையில் தோன்றும். பிறகு தான் நீங்கள் அறிவீர்கள் அந்த பெண் வாடிக்கையாளர் ஒருவரால் கொல்லப்பட்டவர் என.
உடனே அந்த செட்டை மூடிவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் நீங்கள் சாட் செய்ய முயலலாம். ஆனால், அந்த சாட்டும் இப்படி ஒரு கதையுடன் தான் முடியும்.
மேலும், இது நிஜமான சம்பவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ் இணையத்தில் இருக்கும் எல்லா பெண்களும் ஏற்கனவே இறந்தவர்கள்.
விபச்சாரிகள் என்றாலே உடலை பணத்திற்காக விற்பவர்கள் என்ற கண்ணோட்டம் தான் உலகம் முழுவதும் இருக்கிறது.
ஆனால், அவர்கள் எப்படி அந்த தொழிலுக்குள் தள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு அங்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்னென்ன என்பது பற்றி நாம் சுத்தமாக அறிந்திருக்க மாட்டோம்.
அவர்களது அலங்காரத்திற்கு பின்னாடி உள்ள அலங்கோலமான பக்கங்கள் பற்றி நாம் அறிய வாய்ப்புகளும் இல்லை. கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ் இணையத்தளத்தில் இருக்கும் பல பாலியல் தொழில் செய்த பெண்களின் முகங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
15 வயதில் கடத்தி செல்லப்பட்டு விபச்சாரத்தில் உட்படுத்தப்பட்ட பெண் கொடுமைகள் தாங்காமல் தற்கொலை செய்துக் கொண்டார். இவர் மட்டும் அல்ல ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துக் கொண்டவர், வேறு முறைகளில் தற்கொலை செய்து கொண்டவர்கள் என பலர் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள்.
பல பாலியல் தொழில் புரிந்த பெண்கள் வாடிக்கையாளர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒரு ஒரு பெண், கொடூரமான வாடிக்கையாளரால் 54 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ் இணையத்தில் காண்பிக்கப்படும் எல்லா பெண்களும் உண்மையாக வாழ்ந்தவர்கள். கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலைக்கு தூண்டப்பட்டவர்கள். விபச்சாரத்தால் உயிரிழந்த சொர்கத்தின் மகள்கள் இவர்கள்.
இந்த இணையதளத்தை ஆரம்பித்ததன் நோக்கமே, விபச்சாரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு உண்டாகும் கொடுமைகளை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக தான்.