எப்படி மகிழ்விக்கிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது துன்பத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. வீட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகி விடக் கூடாது.
வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான உடலுறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை.
மேலும் மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு “ஆட்டத்தில்” இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வித்திட்டு விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கும், உற்சாகப்படுத்தும்.
உங்கள் மீது உங்களது துணைக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, இன்று என்ன நடக்க போகிறதோ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.