படகு நிலையில் நம்மை வளைத்து மேம்படுத்தும் நவுகாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு, இடுப்பு, தொடை ஆகிய பகுதிகளின் வலிமையை அதிகரித்து ஒல்லியாக வைத்துக் கொள்ளலாம்.
எப்படி செய்ய வேண்டும்?
முதலில் கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களைச் சற்று அகலமாக வைத்து கைகளை உடம்பில் இருந்து சற்று தள்ளி வைத்துக் கொண்டு மூச்சை பொறுமையாக இழுத்து விட வேண்டும்.
பின்பு இரு கால்களையும் சேர்த்து, கைகளை உடம்போடு சேர்த்து வைத்துக் கொண்டு வயிற்று பகுதியில் உள்ள மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும்.
அதன் பின் சுவாசத்தை நன்றாக உள் இழுத்தவாறு இரு கால்களையும் பொறுமையாகத் தூக்கி கால்களைச் சற்று உயர்த்தி, இரு கைகளையும் தொடைக்கு அடியில் வைத்து பொறுமையாக தலையை நேராக கொண்டு வர வேண்டும்.
பின்னர் இரு கைகளாலும் தொடைப் பகுதியை பிடித்து இங்கும் அங்குமாக, படகு போல அசைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இப்பயிற்சியை செய்து வர வேண்டும்.
பலன்கள்
- வயிறு, இடுப்பு, தொடைப் பகுதிகள் வலுவடையும்.
- இடுப்பு மற்றும் வயிற்றில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும்.
குறிப்பு
தலைச்சுற்றல் மற்றும் முதுகுவலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த நவுகாசனம் செய்வதை தவிர்ப்பது நல்லது.