Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஸ்லிம் அண்ட் ஸ்மார்ட்டாக மாற ஈஸி டிப்ஸ் இதோ….

ஸ்லிம் அண்ட் ஸ்மார்ட்டாக மாற ஈஸி டிப்ஸ் இதோ….

40

உங்கள் விருப்பங்களுக்குத் தடைபோடாமல் உடம்பைக் குறைக்கணுமா? அதற்கும் வழியுண்டு. தினசரி பழக்க வழக்கங்களில் ஒருசில சின்ன மாற்றங்களை மட்டும் செய்தாலே போதும். உங்களிடம் நீங்களே நம்ப முடியாத அளவு மாற்றங்களை உணர்வீர்கள். அப்படி என்ன மாற்றம் அது? இதோ …..

குறிப்பிட்ட கால இடைவெளியில் சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதைக் குறைப்பதாக நினைத்துக் கொண்டு, இடையில் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சாப்பிடும்போது வேறு என்ன செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். சாப்பிடும்போது முழு கவனமும் சாப்பிடுவதில் தான் இருக்க வேண்டும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாப்பிடும்போது, டீவியோ பார்த்துக்கொண்டோ பாட்டு கேட்டுக்கொண்டோ சாப்பிடக் கூடாது.

அப்படி செய்யும்போது நமக்கே தெரியாமல் நிறைய சாப்பிட்டுவிடுவோம். சாப்பிடும்போது வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினால் நம்முடைய வயிற்றுக்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பு அறுந்துபோகும். வயிறு நிரம்பிவிட்டது என்னும் சிக்னல் மூளைக்குச் செல்வதில்லை. அதனால் சாப்பிடும்போது சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

சாப்பிடும்போது பற்களால் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தாடைகளில் அசைவுகள் உண்டாகும்போதுதான் அதிலுள்ள உணர்ச்சி நரம்புகள் மூலம் உணவு மனநிறைவாக இருக்கிறது என்ற சிக்னல் மூளைக்கு அனுப்பப்படுகிறது. அப்போதுதான் உங்களுக்கும் சாப்பிடும் அளவு அதிகமாக இருக்கிறதா குறைவாக உள்ளதா என்பது தெரியவரும். எனவே சாப்பிடும்போது பற்களால் நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

பெரும்பாலானோர் னிமையில் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் தனிமையால் மனஅழுத்தமும் மன உளைச்சலும் ஏற்படுகிறது. நண்பர்களோடு சென்று நேரத்தை செலவிடுங்கள். நேரம் போவதே தெரியாமல் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கும்பொழுது, உணவின் மீதான கவனம் குறைந்துவிடும்.

பெரிய தட்டுகளில் உணவை பரப்பி சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு சிறிய தட்டில் சாப்பிடத் தொடங்குங்கள். அது நீங்கள் சாப்பிடும் உணவின் அளவைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவி செய்யும். இதனால் தேவையில்லாமல் அனாவசியமாக சாப்பிடும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக சிறிய தட்டுகளில் சாப்படும்போது நிறைய உணவு இருப்பதுபோல் தோன்றும். அதனால் நீங்களும் குறைவாகவே சாப்பிடுவீர்கள். ஆனால் உடலுக்கு நீர்ச்சத்து மிகமிக அவசியம் என்பதால், பெரிய டம்ளர்களில் குடியுங்கள். அப்போததான் தண்ணீர் குடிப்பதை அதிகப்படுத்த முடியும்.

எடையைக் குறைப்பதற்காக நம்மில் பலபேர் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. அதற்கு பதிலாக, காலையில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, முளைகட்டிய பயறு வகைகள், பருப்பு, பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடுவதால் ஒட்டுமொத்தமாக, நாள் முழுவதும் உட்கொள்ளும் உணவின் அளவு இயல்பாகவே குறைந்துவிடும்.