விந்து பிரச்சனை:ஆண்களுக்கு தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அவர்களை அறியாமலேயே விந்து வெளியேறும். இப்படி விந்து வெளியேறுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டால், எப்போதும் உடலுறவு குறித்த எண்ணத்துடன் இருப்பது என்று சொல்வார்கள்.
ஆனால் உண்மையில் அதற்கும் உடலுறவு பற்றி எண்ணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு அசாதாரண நிகழ்வா? ஆரோக்கியமற்றதா? என்று பலருக்கும் ஓர் சந்தேகம் இருக்கும். ஆனால் இது சாதாரணம் தான். பெண்களுக்கும் இந்நிகழ்வு ஏற்படுமா என்ற கேள்வி சில ஆண்களுக்கு எழும். ஆம், ஆனால் அது அரிதாகவே.
சரி, இப்போது தூக்கத்தில் விந்து வெளியேறுவது குறித்த சில உண்மைகளைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
உண்மை #1
தூக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது அனைவருக்குமே நிகழும் என்று கூற முடியாது. சிலர் இந்நிகழ்வை சந்தித்திருக்காமல் கூட இருக்கலாம். மேலும் உடல்நல நிபுணர்கள், இந்நிகழ்வு ஓர் சாதாரணமான ஒன்று எனவும், இது நிகழ்ந்தால் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.
உண்மை #2
ஆண்கள் பருவமடையும் போது தான் இனப்பெருக்க மண்டலத்தில் விந்தணு உற்பத்தி செய்யப்படும். எனவே ஆண்கள் பருமடைந்த ஆரம்ப காலத்தில் இந்நிகழ்வை அடிக்கடி சந்திக்கக்கூடும்.
உண்மை #3
தூக்கத்தில் விந்து வெளியேறுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. எனவே இதனைத் தடுப்பதற்கான வழிகளைத் தேடி முயற்சிக்க வேண்டாம். சொல்லப்போனால் இதுவும் ஓர் ஆரோக்கியமான நிகழ்வு தான்.
உண்மை #4
தூங்கும் நிலையும் தூக்கத்தில் விந்து வெளியேறுவதற்கு காரணமாகும். அதுவும் குப்புறப் படுக்கும் போது, ஆண்குறி படுக்கையுடன் உராய்ந்து விந்துவை வெளியேறச் செய்கிறது.
உண்மை #5
சுயஇன்பம் காண்பது இதற்கு ஓர் நிவாரணியாக இருக்குமென சில ஆதாரங்கள் கூறுகின்றன. விந்துப்பை நிரம்பி இருப்பதால் தான் தூக்கத்தில் விந்தது வெளியேற்றப்படுகிறது. ஆனால் சுயஇன்பம் அனுபவிப்பதால் இப்பிரச்சனை இருக்காது.
உண்மை #6
சர்வே ஒன்றில் 39 சதவீத பெண்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்நிலையை சந்தித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
உண்மை #7
உடலில் வெப்பம் அதிகரித்தாலோ அல்லது தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டாலோ, அவர்களுக்கு தூக்கத்தில் விந்து தானாக வெளியேறும். வேண்டுமானால் கவனித்துப் பாருங்கள்.
உண்மை #8
80 சதவீத ஆண்கள் தங்களின் வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையாவது தூக்கத்தில் விந்து வெளியேறும் நிகழ்வை சந்தித்திருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது