இரவில் 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களுக்கு இருதய நோய் வரக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மனிதன் குறைந்தது ஒரு நாளைக்கு 8 மணிநேரம் தூங்க வேண்டும். இல்லையேல் உடல் அசதி, சோர்வு ஆகிய உடல் உபாதைகள் நேரும். ஆனால், அதையே பழக்கமாக வைத்து 8 மணி நேரத்துக்கு மேல் தூங்ககூடாது.
அதிகநேரம் தூங்கினால் மூளை வேலை செய்யாது, சோர்வாக இருக்கும். அதிகநேரம் தூங்குபவர்கள், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பர் என்று ஆய்வு கூறுகிறது. அதிகநேரம் தூங்குவதனால் மன அழுத்தம் உடையவர்களுக்கு தூக்கம் ஒரு நல்ல மருந்தாக அமைகிறது.
குறைந்தது 8 மணி நேரமாவது ஒரு மனிதம் தூங்க வேண்டும், அதிலும் இரவில் தான் தூங்க வேண்டும். காரணம், அச்சமயம் மூளை, இதயம் ஆகியவற்றின் செயல்பாடானது குறைவாகவே இருக்கும்.
அதேசமயம் 8 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் இருதய நோய் பாதிப்பு ஏற்படும். 41 சதவிகிதம் இறப்பு நேர்வதற்கான அபாயமும் உள்ளது. நன்கு தூங்கினால் தான் காலை எழும்போது மூளை, இருதயம் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் எந்த வேலை செய்தாலும் மனதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
அதிகநேரம் தூங்கவும் கூடாது, குறைவான நேரமும் தூங்ககூடாது. சரியான அளவு தூக்கம் தான் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
பெண்கள் அதிகநேரம் தூங்குவதனால் கருத்தறிப்பு குறைவாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனால் தான் மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன்கள் சுரப்பதில் மாற்றம் ஏற்படுகிறது. அதேபோல் உடல் எடையும் அதிகம் உணவு உட்கொள்வதால் ஏற்படுவதில்லை. அதிகநேரம் தூங்குவதனால் ஏற்படுகிறது. இதனால் உடல் எடை 21 சதவிகிதம் அதிகமாகிறது.
இவை எல்லாவற்றிருக்கும் மேலாக அதிக தூக்கம் இறப்பை சந்திக்கும். தொடர்ந்து அதிகநேரம் தூங்குபவர்களுக்கு ஆயுட் காலம் குறைவுதான் என்று ஆய்வின் முடிவு கூறுகிறது.