தூக்கமின்மை என்பது பொதுவாக அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. ஆனால் தூக்கமின்மை பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரிக்கு செல்லும் பெண்கள் வேலையில் மனஅழுத்தம், அதிக வேலை பளு, போன்ற காரணங்களால் தூக்கம் வராமல் சிரமப்படுகிறார்கள்.
இளம் பெண்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. தூக்கமின்மையால் அவதிபடுபவர்கள், எவ்வாறு நன்றாக தூங்கலாம்? என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பதை பார்க்கலாம்.
* மாலை 3 மணிக்கு பிறகு காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்த்து விடுவது நல்லது. அதற்கு பதிலாக கிரீன் டீ குடிக்கலாம்.
* எப்பொழுதும பசியோடு உறங்க செல்ல கூடாது. இரவு சாப்பாட்டை உறங்குவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன் முடித்து விட வேண்டும். தினமும் உறங்க போகும் போது இளம் சுடான பால் குடிப்பதை வழக்கமாக கொள்ளலாம்.
* நீங்கள் தூங்க போகும் முன் உங்களுடைய போன், லேப் டாப், தொலைக்காட்சி, வீடியோ கேம்ஸ் போன்ற சாதனங்களை அணைத்து விட வேண்டும்.. இவை நிம்மதியான தூக்கத்தை கொடுப்பவை.
* தினமும் தூங்க செல்வதற்கு முன்னபாக அரை மணி நேரம் பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது போன்ற பழக்கத்தை வழக்கமாக கொள்ளுங்கள். இது மனதிற்கு அமைதியை கொடுத்து நல்ல தூக்கம் வர வழிசெய்யும். சிறிது நேரம் தியானம் செய்வது கூட நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
* உங்களுடைய படுக்கை அறையானது அமைதியாகவும், இருட்டாகவும் மற்றும் குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த முறைகளை பின்பற்றி வந்தால் இளம் பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
விடுமுறை தினத்திலும் இந்த பழக்க முறையை பின்பற்றி வந்தல் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.