Home சூடான செய்திகள் நீங்கள் எப்படி அமர்வீர்கள்! இதுதான் உங்கள் குணமாம்

நீங்கள் எப்படி அமர்வீர்கள்! இதுதான் உங்கள் குணமாம்

36

ஒருவர் உட்காரும் நிலையை வைத்து, அவர்களின் ஆளுமை திறன் எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறிவிடலாம்.

காலின் பாதங்கள் விலகி வைத்து அமர்தல்

காலின் இரண்டு பாதங்களையும் விலக்கி வைத்து இருந்தபடி அமர்ந்தால், அவர்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் படைப்பு மற்றும் ஆற்றலில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.

மேலும் இவர்கள் தன்னை சுற்றி உள்ளவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல குணத்தை உடையவர்கள்.

கால் மேல் கால் வைத்து அமர்தல்

கால் மீது கால் போட்டு அமர்பவர்கள் உயர்வான மற்றும் நேர்மறையான கனவு காண்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தனது வணிகம் மற்றும் தனது பார்ட்னரை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள்.

மேலும் இவர்கள் பயணம் செய்யும் போது, மற்றவர்களை மிகவும் எளிதில் நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும் குணங்களைக் கொண்டவர்கள்.

காலின் பாதங்கள் தொடும்படி அமர்தல்

தனது இரண்டு கால்களின் பாதங்கள் தொடுமாறு கால்களை அகற்றி வைத்து அமர்பவர்கள், சாதாரண விஷயங்களை முடிவு செய்வதில் கூட பல்வேறு குழப்ப நிலைகளில் இருப்பார்கள்.

மேலு இவர்கள் அதிகமாக யோசிப்பது, வாரத்தின் கடைசி நாட்களில் தங்களை எப்படி அலங்கரித்து அழகாக இருப்பது என்பது குறித்த யோசனையில் கூட தெளிவற்ற நிலையில் இருப்பார்கள்.

இரண்டு கால்களுக்கு நடுவில் இடைவெளி

அமரும் போது இரண்டு கால்களுக்கும் நடுவில் சிறிதளவு இடைவெளி இருக்குமாறு அமர்ந்தால், அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள்.

மேலும் இவர்கள் எதையுமே ஒளிவிமறைவு இன்றி பேசுபவர்கள் என்பதால் இவர்கள் பொய் கூறுபவர்கள் மீது அதிக கோபம் கொள்வார்கள்.

இரண்டு காலையும் சேர்த்து அமர்தல்

தனது இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து இடைவெளி இல்லாமல், சிறிது சாய்வான தோற்றத்தில் உட்கார்ந்தால், அவர்கள் தனது கொள்கையில் மிகவும் தெளிவாக இருப்பார்கள்.

மேலும் இவர்கள் தன்னுடைய குடும்பத்தை கவனிப்பதை விட கல்வி பற்றிய லட்சியத்தின் குறிக்கோளை அடைவதில் ஆர்வமாக இருப்பார்கள்.