Home ஆரோக்கியம் சிறுநீரக பாதிப்பும் – தீர்க்கும் வழிமுறையும்

சிறுநீரக பாதிப்பும் – தீர்க்கும் வழிமுறையும்

75

சிறுநீரகம்…

மனித உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று.

ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி உடலை செம்மையாக இயங்க வைப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்காற்றுகிறது. சிறுநீரகம் பிரித்தெடுக்கும் கழிவுகள் உடனுக்குடன் வெளியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அதன் பாதிப்பு அதிகமாகும். எனவே தான் ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க கூடாது என முதியவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அதை முறையாக பாதுகாக்கவில்லை என்றால் பாதிப்பு அதிகமாகிவிடும்.

சிறுநீர் மார்க்கத்தில் அழற்சி என்பது மருத்துவ துறையில் பொதுவாக காணப்படும் ஒரு குறியீடு. மூத்திர பையிலோ, சிறுநீரகத்திலோ இது ஏற்படலாம். மூத்திரம் வரும் பாதையிலும் அழற்சி ஏற்படலாம். சில நேரம் மூத்திர பையிலும் அழற்சி ஏற்படலாம். இதனை சிஸ்டைடிஸ் என்று சொல்லுவார்கள். இந்த அழற்சி கிருமி தொற்று மேலே சென்று சிறுநீரகத்தை தாக்கும் போது அதற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

இது போன்ற நிலையில் சிறுநீர் போகும்போது வலி ஏற்படும் அல்லது அதிகமாக போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இல்லையேல் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். மேலும் காய்ச்சல் ஏற்பட்டு, இடுப்பின் இரு பகுதிகளிலும் வலி காணப்படும். பொதுவாக இ கோலி என்ற ஒரு வகை பாக்டீரியாவால் இது வருகிறது. பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகமாக இருக்கும். சிலருக்கு இப்பாதிப்பு அடிக்கடி ஏற்படும். உடலுறவில் அடிக்கடி ஈடுபடுவதும் இப்பாதிப்புக்கு ஒரு காரணமாகும்.

எந்த வகை பிரச்சினை? :

உடலில் ஏற்படும் குறியீடுகளை வைத்தே இதை கண்டுபிடித்து விடலாம். ஒரு சில நேரம் சிறுநீர் பரிசோதனை செய்து எந்த வகை பாக்டீரியா என்று கண்டுபிடித்து அதற்கு மருந்து கொடுக்க வேண்டும். நவீன மருத்துவத் தில் ஆன்டி பயாட்டிக் கொடுப்பார்கள். சில நேரம் இந்த ஆன்டிபயாட்டிக் வேலை செய்வதில்லை. அப்போது அசுத்த ரத்தகுழாய் வழியாக மருந்தை ஊசியின் மூலம் செலுத்தி சிகிச்சை அளிப்பார்கள்.

மேலும் சில பரிசோதனைகளும் செய்வ துண்டு. இதில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு மூத்திரத்தில் பழுப்பு வரலாம். பெண்கள் தொப்பு ளுக்கு கீழே வலிக்கிறது என்று சொல் வார்கள். இந்த அழற்சி மேலே சிறுநீரகத்திற்கு போகும் போது வாந்தி கூட ஏற்படலாம்.