Home ஆரோக்கியம் சிறுநீர் துர்நாற்றத்தை வைத்து நோயை அறியலாம்

சிறுநீர் துர்நாற்றத்தை வைத்து நோயை அறியலாம்

50

சிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டால் அது எந்த நோயின் அறிகுறியை உணர்த்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

சில நேரங்களில் அதிகப்படியான உடல் வறட்சி சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும். எனவே அதற்கு போதிய அளவு நீரைப் பருகினால், இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

சர்க்கரை நோய் இருந்தாலும் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். ஏனெனில் கல்லீரலில் கீட்டோன்களின் அளவு அதிகரிப்பதால், அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.

சிறுநீரக கற்கள் இருந்தால் கூட அது சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே கடுமையான சிறுநீர் துர்நாற்றம் ஏற்பட்டால், அது சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.

கல்லீரலில் தொற்றுகள் இருந்தாலும் அது சிறுநீரக துர்நாற்றத்தை உண்டாக்கும். கல்லீரலானது டாக்ஸின்களை வெளியேற்ற முடியாத அளவில் செயலிழந்தால்,
அப்போது சிறுநீரில் அமோனியாவின் அளவு அதிகரித்து, சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

டயட் இருக்கும் போது சாப்பிடக் கூடிய சில உணவுகள், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் விட்டமின் B6, புரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் நிறந்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

சிறுநீரில் உள்ள அமோனியாவின் அளவைக் கட்டுப்படுத்த, சிறுநீரகங்கள் கடுமையாக வேலை செய்யும் போது, சிறு நீரகங்கள் பலவீனமாகி, சிறுநீரில் அசிட்டிக் அளவு அதிகரித்து சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.