சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள் (UTI) என்பவை, பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் வேதனை மிகுந்த பிரச்சனைகளாகும். அதாவது சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய், சிறுநீர் திறப்பு போன்ற பகுதிகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகளே சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள் எனப்படுகின்றன.
இதுபோன்ற நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவற்றில் சில: அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பது, சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி, சிலசமயம் சிறுநீரில் இரத்தம் வருவது. ஆம். . இவை தொந்தரவு மிகுந்தவை தான். எனினும், இவற்றை சிகிச்சை மூலம் சரிசெய்யவும், வராமல் தடுக்கவும் முடியும். சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்க சில குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்:
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள் (Keep yourself hydrated)
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகளை அண்டவிடாமல் தடுப்பதில், நீருக்கு முக்கியப் பங்குள்ளது. தினமும் போதுமான அளவு நீர் அருந்துவதால், சிறுநீர் நீர்த்துப்போகும், இதனால் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பாதையை அடைந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும் முன்பு அவை சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். பழச்சாறுகளும் அருந்தலாம்.
சிறுநீர் கழித்த பிறகு துடைக்க வேண்டும் (Always wipe)
எப்போதும் சிறுநீர் கழித்த பிறகு, டிஷு கொண்டு துடைக்க வேண்டும். முன்பக்கத்திலிருந்து பின்னோக்கித் துடைக்க வேண்டும். இதனால் சிறுநீர் பாக்டீரியாக்கள் சிறுநீர் திறப்பில் பாதித்து நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. சிறுநீர் கழித்த பிறகு கைகளைக் கழுவ மறக்க வேண்டாம். இது பொதுவான சுகாதாரம்!
நீண்ட நேர குளியலைத் தவிர்க்கவும் (Avoid long baths)
அரைமணி நேரத்திற்கும் மேலாக பாத் டப்பில் இருப்பது நல்லதல்ல ஷவரில் நீண்ட நேரம் குளித்துக்கொண்டிருப்பது, கிருமிகளும் பாக்டீரியாக்களும் நீரின் வழியாக உங்கள் சிறுநீர்ப் பையை அடைய அதிக வாய்ப்புள்ளது. இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். நீண்ட நேரம் குளிக்கும்போது, குளியல் எண்ணெய், சென்ட், பெர்ஃபியூம், பிற உப்புகள் போன்றவையும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
ஆடை அணிவது (Prevent through dressing)
அசௌகரியமான, இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும். குறிப்பாக உள்ளாடைகள். நீச்சலுடையில் அதிக நேரம் இருப்பதையும் தவிர்க்கவும், உள்ளாடைகளை அடிக்கடி மாற்றவும். காற்றோட்டமுள்ள இயற்கை இழைகளாலான உள்ளாடைகளைப் பயன்படுத்தவும். டிடர்ஜெண்டுகளிலும் கவனம் செலுத்தவும். அதிக நேரம் துணிகளில் டிடர்ஜெண்டுகளைப் பயன்படுத்துகிறோம், இவையும் சிறுநீர் திறப்பில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஆகவே லேசான டிடர்ஜெண்டுகளைப் பயன்படுத்தலாம்.
பெர்ஃபியூம் சேர்த்த தயாரிப்புகளை இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் பயன்படுத்த வேண்டாம் (Don’t use perfumed products in intimate areas)
இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கான ஹைஜீன் ஸ்ப்ரே, பவுடர்கள், டவுச், போன்றவற்றைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். இவை நன்மையை விட அதிக தீமையே செய்யும். கழுவுவதற்கான தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். அவை pH சமநிலை கொண்டவையா என்று மட்டும் பார்த்துக்கொள்ளவும். எனினும், இவற்றைப் பயன்படுத்திய பிறகு எரிச்சல் ஏற்பட்டால், உடனடியாக வழக்கம்போல் வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்தத் தொடங்கிவிடலாம்.
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள் மிகவும் வேதனை தரக்கூடியவை. உங்களை அவை நெருங்காதபடி பார்த்துக்கொள்ள இந்தக் குறிப்புகள் உதவும்!