சிலருக்கு உடலுறவில் ஈடுப்பட்ட பிறகு இரத்தப்போக்குடன் சேர்ந்து கட்டிகளும் வெளிப்படும். இது எதனால் என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
சிலருக்கு தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு இரத்தப்போக்கு, கட்டிகள் வெளிப்படும். இவ்வாறு ஏற்படும் போது தம்பதிகள் சிலர் சாதரணமாகவும், சிலர் மிகுந்த அச்சத்துடனும் இதை எதிர்க் கொள்கின்றனர். உண்மையில் இவ்வாறு இரத்தபோக்கு மற்றும் கட்டிகள் வெளிப்பட என்ன காரணம்? எதனால் இப்படி ஏற்படுகிறது என இங்குக் காணலாம்…
கிழிசல்! உடலுறவில் ஈடுபட்ட பிறகு இரத்தப் போக்கு ஏற்படுவதற்கு முதல் காரணம் பிறப்புறுப்பில் கிழிசல் அல்லது அதிர்ச்சி ஏற்படுவது தான். இதற்கான முதல் காரணமாக கருதப்படுவது கிழிசல் உண்டாவது தான் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். கருப்பை வாய் பகுதியில் கிழிசல் உண்டானது மகப்பேறு மருத்துவர்கள் கண்டறிந்தால். அதை தைத்து சரி செய்து விடுவார்கள்.
கருப்பை வாய்! கருப்பை வாய் பகுதியில் ஏதேனும் வளர்ச்சி, தீங்கற்ற கூடுதல் வளர்ச்சி போன்றவை ஏற்பட்டிருந்தால் கூட உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படலாம்.
அல்சர்! பிறப்புறுப்பு / கர்ப்பப்பை பகுதியில் அல்சர் போன்ற ஏதாவது புண் இருந்தால் கூட உடலுறவில் ஈடுபட்ட பிறகு இரத்தப்போக்கு ஏற்படலாம்.
முதல் முறை! முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது சிலருக்கு இரத்தப்போக்குடன் கட்டிகள் போன்றும் வெளிப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு காரணம் யோனி திரையில் கிழிசல் உண்டாவது என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த தருணத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படலாம்.
வீரர்கள்! இது அனைவர் மத்தியிலும் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. விளையாட்டு வீராங்கனைகள், தடகள வீரர்களுக்கு அவர்களது கடின பயிற்சியின் போது கூட இவ்வகை கிழிசல்கள் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவரை அணுகவும்! ஒருவேளை அதிகளவில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது எனில், நேரம் தாழ்த்தாமல் உடனே மகப்பேறு மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.