Home சமையல் குறிப்புகள் ஈரல் மாங்காய் சூப்

ஈரல் மாங்காய் சூப்

29

தேவை:
ஈரல் மாங்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் – தலா 1
தனியா, மிளகு, சீரகம், சோம்பு – 1 ஸ்பூன்
மஞ்சள் – 1 துண்டு
அரிசி களைந்த தண்ணீர் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை, மஞ்சள்தூள் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:
ஈரல் மாங்காயை பொடியாக நறுக்கி 5 முறை கழுவி எடுத்துக்
கொள்ளவும். சின்னவெங்காயம், மஞ்சள், மிளகு, சீரகம்,
சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில்
போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில்சிறிதுஎண்ணெய்ஊற்றிஈரல்மாங்காய்,மஞ்சள்தூள் அரைத்த விழுது, தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரிசி களைந்ததண்ணீர், ஊற்றி நன்கு வேகவிடவும்.
1 விசில் வந்ததும்குக்கரை திறந்து சிறிதளவு உப்பு போட்டு, 1 கொதி வந்ததும்இறக்கவும்.