Home பாலியல் கட்டிலில் ஆணும் பெண்ணுக்கும் பகிரவேண்டிய பாலியல் உணர்வுகள்

கட்டிலில் ஆணும் பெண்ணுக்கும் பகிரவேண்டிய பாலியல் உணர்வுகள்

353

பெண்களின் இயல்பாக இருக்கும் பாலியல் உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக மட்டுமே திருமணத்தை கருதாமல், பரஸ்பரம், அன்பையும், பரிவையும் காட்டும்படியான இணக்கத்துடன் தம்பதிகளிடையே பாலியல் உணர்வுகள் வெளிப்படவேண்டும்.

ஆரம்பத்தில் ஆர்டீசியன் ஊற்றாய் பெருக்கெடுக்கும் செக்ஸுவல் உணர்வுகளும், பரிமாற்றங்களும் காலப்போக்கில் குறைந்துபோய்விடுவதும்கூட பல தம்பதிகளிடைய நிகழ்கிறது. இப்படி அல்லாமல் வாழ்க்கையின் அடிநாதமாக செக்ஸ் உறவு தொடர்ந்து அமைந்திருக்கும் மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தம்பதியர்களுக்கு இடையேயான செக்ஸ் உறவு ஒப்பந்த அடிப்படையில் அமைந்திருக்கக்கூடாது. அத்தகைய பழக்கத்தையும் வளர்த்துக்கொள்வது தவறு. அதாவது, இதை வாங்கித்தாருங்கள், இதை நிறைவேற்றுங்கள், இதை பூர்த்தி செய்யுங்கள் என்று வர்த்தக தொணியில் செக்ஸ் பரிவர்த்தனை அமையக்கூடாது. வியாபாரத்திற்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கும். வாழ்க்கைக்கு பொருந்தாது. இத்தகைய மனச் சிக்கல்களை வளர்த்துக்கொண்டு இல்லற சுகம் காண்பதில் இடையூறுகளை அனுபவிக்க வேண்டாம். செக்ஸ் விஷயத்தில் ஒருவருக் கொருவர் வற்புறுத்தல்களோ, கட்டாயப்படுத்தலோ கூடாது. இதனால் சந்தோஷத்திற்கு இடைஞ்சல் ஏற்படலாம். ஒருவர் இன்னொருவர் விருப்பத்திற்கு இணங்காமல் போகலாம். ஆரம்பத்திலேயே இத்தகைய எண்ணங்களை இருவரும் தவிர்ப்பது நல்லது.உணர்வுகளை மதிப்பது, செக்ஸ் விஷயத்திலும் நடைபெற வேண்டும். உணர்வுகளை மதிக்காத தம்பதிகளிடையே பரஸ்பர செக்ஸ் பரிவர்த்தணை திருப்திகரமாக இருப்பதில்லை. இருவருக்கும் பொதுவான திருப்தி இதனால் தடைபடும்.

கணவன்-மனைவி இருவரும் செக்ஸ் விருப்பங்களை, தேவைகளை , சந்தேகங்களை விவாதித்து, தங்களுக்குள் செக்ஸ் அறியாமையை அகற்றிக்கொள்ள வேண்டும். இது அவர்களின் பாலியல் பரிவர்த்தணைக்கு மேலும் மெருகூட்டலாக அமையும். தகுந்த பாலியல் மருத்துவரை கலந்தாலோசிப்பதில்கூட தப்பில்லை.

புதுமண தம்பதிகள் திருமணத்திற்கு முன் மருத்துவ ஆலோகனை பெறுதலோ, பரிசோதனை செய்து கொள்வதோ தேவையற்ற ஒன்றாகத்தான் கருதப்படும். மிகவும் நெருங்கிய உறவில் மணமுடிப்பதை தவிர்ப்பது நல்லது.

திருமணத்தன்றே இல்லற சுகம் காணவேண்டும் என்பதில்லை. தம்பதியரின் விருப்பமே இதில் முக்கிமானது. முதல்நாள் பாலியல் உறவில் சங்கடங்களோ, கஷ்டமோ இருந்தால் கலங்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது இனிமையான ஒரு நாள். எல்லோருக்குமே சத்தான உணவு அவசியம்தான். மணமக்களும் இதனை கைகொள்வதில் தப்பில்லை. நல்ல மனம் மட்டுமல்ல நல்ல உடம்பும் அவசியம். உடம்பை கட்டுகோப்புடன் வைத்து அதனை களைந்தாலே போதும். நோயின்றி வாழ ஆரம்பித்து விடலாம்.

போட்டிகள், வாழ்க்கையில் தேவையற்ற எண்ணங்களை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படுதல், தகுதி மீறி வளர்ச்சி பெற துடித்தல், பணத்தின் மீதான ஆசை, பதவி மோகங்கள், புகழ் வெறி போன்றவைதான் மனிதனை இன்று ஆளாய் பறக்க வைக்கின்றன. இப்படியான சூழ்நிலையை களைந்து மனிதன் வாழ முற்பட்டாலே போதும். நிச்சயம் ஆரோக்யமுடன் வாழலாம்.

கடைசி நிமிடத்தில் ஆர்பரிக்க வேண்டிய கட்டாயம், எதையும் ஒத்திப்போடும் மனப் பான்மைகூட மனிதனை அவசர சக்திக்கு உள்ளாக்க நேரிடும். இப்படியான பழக்க வழக்கங்களை தவிருங்கள். அவசரம் உங்களை விட்டு ஓடியே போய் விடும்.

அடுத்து-அன்றைய பணியை அன்றே முடிக்க கற்றுக்கொள்ளுதல், நேரந்தவறாமை, செய்ய வேண்டிய பணிகளை மட்டும் மேற்கொள்ளுதல் போன்றவைகளாலும் அவசர கதியான வாழ்க்கை முறையை மாற்றலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக-போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். எனவே பொருளாதார விசயத்தில் நிறைவு பெறும் வகையில் பேராசையின்றி வாழுங்கள்.