Home பெண்கள் அழகு குறிப்பு sexy Lips கவர்ச்சிகரமான உதட்டை பெறனுமா? நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

sexy Lips கவர்ச்சிகரமான உதட்டை பெறனுமா? நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

35

உங்கள் உடம்பினை நீங்களே சுயமாக பாதுகாக்க விரும்பும் வயதில், அவற்றை பற்றி பலரிடம் பேசிகொண்டிருப்பது அனைவரது இயல்பாகும். அவ்வாறு உங்கள் உதடுகள் முனுமுனுக்க, உங்கள் உதடுகள் மட்டும் பப்ளியாக இல்லையே என கவலைகொண்டு அதற்கான தீர்வை தேடுவதும் பலருடைய இயல்பாகவே இன்று இருக்கிறது. உங்கள் உதடுகள் மொழு மொழுவென அழகாக… சில ரெசிபிகள் இதோ உங்களுக்காக…
இன்று நகர மக்களால் அதிகம் பேசப்படும் ஒரு குறை என்னவென்றால்… இந்த ப்ளம் லிப்ஸ் இல்லை என்ற பிராப்ளம் பற்றி தான். அவர்கள் முகத்தை அழகுபடுத்தி மற்றவர்களை இம்பிரஸ் செய்ய ஆசைகொள்ளும் பலரும் இருக்க…இந்த பிங்க், ப்ளம் லிப்ஸ் பிராப்ளம் சரியானால், என்னுடைய முகம் இன்னும் அழகாக இருக்குமென்னும் கவலையையும் முன்வைக்கின்றனர்.

அதனால் மனம் தளர்ந்துவிடாமல்…உங்களுடைய நம்பிக்கையை சீராக்க நாங்கள் உதவி செய்கிறோம். ஆம், வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே கொழுகொழு உதடுகளை நீங்கள் பெற, நாங்கள் இதோ முன்வருகிறோம். இன்றே இதனை ட்ரை பண்ணி பார்த்து, பலனை தான் அடையுங்களேன். இதனை முயற்சி செய்யும் முன் முதலில் உங்கள் ஸ்கின்னுக்கு ஒரு டெஸ்ட் தேவைப்படுகிறது. பட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஸ்க்ரப்: ஆலிவ் ஆயில் 1 ஸ்பூன் எடுத்துகொள்ளுங்கள். அத்துடன் இலவங்க பவுடரை ஒரு ஸ்பூன் சேர்த்துகொள்ளுங்கள். அதன் பின், ஒரு ஸ்பூன் கடல் உப்பினை சேர்த்துகொண்டு… நன்றாக அனைத்தையும் கலந்துகொள்ளுங்கள். அந்த கலவையை உங்கள் உதடுகளில் பூசிக்கொண்டு சிறிது நேரத்திற்கு பிறகு தேய்த்துகொள்ளுங்கள். அதன் பின் குளிர்ந்த நீரினை கொண்டு உங்கள் உதட்டினை கழுவி விடுங்கள்.

பெப்பர்மின்ட் மற்றும் ஆலிவ் ஆயில் லிப் மாஸ்க்: ½ ஸ்பூன் இஞ்சி பொடியை எடுத்துகொள்ளுங்கள். அத்துடன் ½ ஸ்பூன் கெய்ன் தூளையும், ½ ஸ்பூன் இலவங்கபட்டை தூளையும், ½ ஸ்பூன் பெப்பர்மின்ட் ஆயிலையும் சேர்த்து எடுத்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள். அதோடு… 1 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை கடைசியாக சேர்த்துகொள்ளுங்கள்.

இப்பொழுது அந்த லிப் மாஸ்கை உதட்டில் தேய்த்துகொள்ளுங்கள். சிறிது நேரம் வைத்திருந்து…அதன் பின்னர், குளிர்ந்த நீரினை கொண்டு உதட்டை கழுவுங்கள். இந்த லிப் மாஸ்கில் போட்டன்ட் இன்க்ரீடியன்ட்ஸ் (சத்துள்ள பொருட்கள்) நிறையவே இருக்க…அது உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பெரிதும் உதவுவதுடன் ப்ளம்ப் லிப்ஸையும் உங்களுக்கு தருகிறது. மேலே குறிப்பிட்ட பொருள்கள், எதாவது அலெர்ஜியை உங்களுக்கு தருமென்றால்…இந்த ரெசிபியை நீங்கள் தவிர்ப்பது நல்லதாகும். சர்க்கரை ஸ்க்ரப் : ஒரு ஸ்பூன் சுகரை எடுத்துகொள்ளுங்கள். அதனை ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். அதனை உங்கள் உதட்டில் தடவுங்கள். அதன் பின் உங்கள் உதடுகளை துடைக்க, டூத்ப்ரஸ் பயன்படுத்துங்கள். இந்த வழிமுறையின் மூலமாக உங்கள் உதடுகள் மொழுமொழுவென ஆவதுடன், இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களும் ஈசியாக வெளியாகிறது.

இஞ்சி ஸ்க்ரப் : தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்கள் எடுத்துகொள்ளவும். அத்துடன் 2 ஸ்பூன்கள் ப்ரௌன் சுகரையும் சேர்த்துகொள்ளுங்கள். அதோடு மொலாசஸ் 1 ஸ்பூனும், இஞ்சி பொடி 1 ஸ்பூனும் எடுத்துகொள்ளுங்கள். அவை அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்து, ½ ஸ்பூன் இலவங்கப்பட்டையையும், ஜாதிக்காய் பொடியையும் கடைசியாக சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து பேஸ்டை போல் இருக்கும் அந்த கலவையை உதட்டில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும்.

பப்பள்கம் லிப் ஸ்க்ரப்: இந்த லிப் ஸ்க்ரப் முறை தான் அனைத்து லிப் ஸ்க்ரப் முறைகளை காட்டிலும் சிறந்ததாக இருக்கிறது. ஆம், உங்கள் சருமத்தை பல வழியில் பாதுகாத்து பயன் தரும் இந்த ஸ்க்ரப், உங்கள் உதடுகளில் ஈரத்தன்மை நீங்காமல் காப்பதுடன், உங்கள் உதடுகளை மிருதுவாகவும், மொழுமொழுவெனவும் மாற்றுகிறது. சுகரையும், ஆலிவ் ஆயிலையும், பப்பள்கம் ப்ளேவர் கொண்ட திரவத்தையும் ஒன்றாக சேர்த்துகொள்ள வேண்டும்.

அந்த ஸ்க்ரப்பை உங்கள் உதடுகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உதடுகளை உங்கள் விரல்களால் நன்றாக தேய்த்துகொள்ள வேண்டும். குறைந்தது சுமார் 15 நிமிடங்கள் தேய்த்து..அதன் பின் குளிர்ந்த நீரினை கொண்டு துடைக்க வேண்டும். இந்த வழிமுறையை தினமும் நாம் பின்பற்றிவர…நல்ல முன்னேற்றத்தை நீங்கள் காணலாம் என்பதே உண்மை. சாக்லேட் லிப் ஸ்க்ரப்: 2 ஸ்பூன் கோகோ பவுடர் எடுத்துகொண்டு, அத்துடன் ஆலிவ் ஆயிலையும் மிக்ஸ் பண்ண வேண்டும். மேலும் 1 ஸ்பூன் தேனையும், 1 ஸ்பூன் சுகரையும் சேர்த்து…இப்பொழுது அனைத்தையும் மிக்ஸ் பண்ணி, அதனை உதடுகளில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர், குளிர்ந்த நீரினை கொண்டு உங்கள் உதட்டினை கழுவ வேண்டும்.

தேன் மெழுகு லிப் பிளம்பர்: ஒரு ஸ்பூன் தேன் மெழுகு எடுத்துகொள்ள வேண்டும். அதனை நன்றாக சில மணி நேரங்கள் கொதிக்கவைத்து, அதன் பின்னர் 5 ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் உருகும் நிலை தேன் மெழுகை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். அத்துடன் ½ ஸ்பூன் இலவங்கப்பட்டை எண்ணெயையும் எடுத்துகொண்டு, ½ ஸ்பூன் வெண்ணிலா சாற்றினையும் சேர்க்க வேண்டும். இப்பொழுது அந்த திரவத்தை பாட்டிலில் கொட்டி தைலம் போல வைத்துகொள்ள வேண்டும். சில மணி நேரங்கள் அந்த திரவம் காயும் வரை காத்திருந்து…உங்கள் விரல்களால் அந்த தைலத்தை எடுத்து உதட்டில் பூசிக்கொள்ள வேண்டும்.