பெரும்பாலான பெண்கள் அழகான தோற்றம் கொள்ள வேண்டும்; உடலுறவில் கணவரை கவர்ந்திழுக்கும் உடலழகு கொள்ள வேண்டும் என்று எண்ணுவதுண்டு. அப்படி அழகான உடல் தோற்றம் பெற சில உடற்பயிற்சிகளை செய்யலாம். என்னென்ன உடற்பயிற்சிகள் செய்து எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்..!
உடற்பயிற்சி #1
பிரசவத்தால் ஏற்பட்ட வயிற்று சதையை குறைத்து, மயக்கும் தோற்றம் பெற செய்ய வேண்டிய முதல் உடற்பயிற்சி குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
முதுகு தரையில் படும்படி, உடலை நேராக வைத்து, மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொள்ளவும். பின் மூச்சை வெளிவிடும் போது, வயிற்றின் மையப்பகுதி முதுகைத்தண்டை தொடுமளவிற்கு வெளிவிட வேண்டும். இந்த முறையை 10 தடவை செய்யவும்.
இது உங்கள் வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைத்து இஞ்சி இடுப்பை பெற உதவும்..!
உடற்பயிற்சி #2
குப்புற படுத்தபின், உங்கள் உடலை முழங்கை மற்றும் கால் விரல்களால் தாங்குமாறு, படத்தில் காட்டியபடி செய்து ஒரு நிமிடத்திற்கு இதே நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும்..! இது உடலுறவில் உங்கள் செயல்பாட்டினை அதிகரிக்க உதவும்..!
உடற்பயிற்சி #3
குப்புற படுத்தபின், உங்கள் முழு உடல் எடையை உள்ளங்கை மற்றும் கால் விரல்களால், படத்தில் காட்டியபடி செய்து, ஒரு நிமிடத்திற்கு இதே நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும்..! இது முதுகுத்தண்டு மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளை பலமாக்க உதவும்..
உடற்பயிற்சி #4
முதுகு தரையில் படுமாறு படுத்து, பிறப்புறுப்பு மற்றும் பின் புட்ட பகுதியின் சதையை குறைக்கும் வண்ணம் படத்தில் காட்டியுள்ளவாறு அழுத்தம் கொடுக்கவும். இது சதைகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதை 5-10 நிமிட கால இடைவெளியில், 10 முறை செய்யவது நல்லது.
உடற்பயிற்சி #5
நேராக நின்று, உட்கட்டாசனம் செய்வது போல், நிற்பதும் உட்காருவதுமாக கைகளை நீட்டியவாறு, 10-12 முறை செய்வது நல்லது. இது தொடையில் உள்ள சதைகளை குறைக்க உதவுகிறது.
உடற்பயிற்சி #6
இந்த பயிற்சியில் படத்தில் காட்டியுள்ளவாறு, நேராக படுத்தபின், முழங்கை மற்றும் கால் விரல்களால் உடலை வளைத்து தாங்க வேண்டும். இவ்வாறு செய்வது உடல் சதைகளை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. பிறப்புறுப்பை பலமாக்குகிறது; மேலும் உடலுறவு குறித்த உணர்வுகளை தூண்டிவிடுகிறது..!
உடற்பயிற்சி #7
இதனை படத்தில் காட்டியுள்ளவாறு, குப்புற படுத்து உள்ளங்கை மற்றும் கால் விரல்களின் மூலம் உடலை தாங்கி மேலே தூக்க வேண்டும்; பின் தரையை தொடாத வண்ணம் இறக்க வேண்டும். இந்த செய்முறையை 10 முறை செய்ய வேண்டும். இது உங்கள் உடலின் தேவையற்ற கொழுப்புக்களை குறைத்து, உடலை பலமாக்க உதவும்..!