இந்திய சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் பாலுணர்வை தூண்டும் சக்தி படைத்தவையாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நம் சமையலில் தினசரி பயன்படுத்தும் வெந்தயம் மனிதர்களின் பாலுணர்வை தூண்டும் பொருளாக உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்!கொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்!
இந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்!இந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் தங்களின் ஆய்விற்காக 25 வயது முதல் 52 வயதுடைய 60 ஆரோக்கியமான மனிதர்களை தேர்ந்தெடுந்து தினசரி இரண்டு வேளை 6 வாரங்களுக்கு வெந்தயம் சாப்பிடக் கொடுத்தனர்.
வெந்தையம் சாப்பிடும் முன்பு இருந்த அவர்களிடம் குறைவாக இருந்த பாலுணர்ச்சி வெந்தையம் சாப்பிட்ட பின்னர் மூன்று முதல் 6 வாரங்களில் அதிகமாக இருந்தது தெரியவந்தது.
வெந்தயம் சாப்பிட்டவர்களுக்கு சராசரியாக 16 சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் வரை அதிகரித்திருந்தது. மேலும் வெந்தயமானது ஆண்களின் டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகரித்திருந்ததாம்.
எனவே பாலுணர்வு தூண்டப்படுவதில் பிரச்சினை உள்ளவர்கள் கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை விட வெந்தயம் சாப்பிடலாம் என்று ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.