தம்பதியர் முதன் முறையாக உடலுறவு கொள்கையிலோ அல்லது சிலருக்கு சாதாரணமாக உடலுறவு கொள்கையிலோ வலி ஏற்படுகிறது; தம்பதியர் இருவரில் உடலுறவின் போது அதிக வலியை அனுபவிப்பது பெண்களே! பெண்களுக்கு ஏன் இந்த வலி ஏற்படுகிறது என்று கேட்கிறீர்களா? உங்கள் கேள்விக்கான விடையை நாம் இந்த பதிப்பில் படித்தறியலாம்..!
1. எனக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது?
தோழியரே! நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித உடலமைப்பு கொண்டவர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நம் அனைவரின் சருமமும் அதிக மென்மைத்தன்மையை கொண்டிருக்கும்; ஆனால், நம் உடல் சக்தியும் நம்முள் இருக்கும் ஹார்மோன் சுரப்பின் அளவும் ஒருவருக்கொருவர் மாறுபடும். மிகவும் மென்மைத்தன்மை கொண்ட பெண்கள் உடலுறவின் போது வலியை உணர்கிறார்கள். மேலும் உங்கள் கணவரின் ஆண்குறி அதிக நீளமானதாக இருப்பதாலும் உங்களுக்கு உடலுறவில் வலி உண்டாகிறது.
2. கன்னித்திரை..
நீங்கள் முதல் முறையாக உடலுறவு கொள்கையில், உங்கள் கணவரின் ஆண்குறியால், உங்கள் கன்னித்திரை கிழிக்கப்டும்; அப்பொழுது இரத்தப்போக்கு உண்டாகும்; இதைப் பார்த்து நீங்கள் பயப்படத்தேவையில்லை. இந்த இரத்தப்போக்கு சில நாட்களில் நின்றுவிடும்; இரத்தப்போக்கு அதிக நாட்கள் நீடித்தால், நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது..!
3. பதற்றம்..
உடலுறவு கொள்கையில் நீங்கள் பதற்றத்துடன் இருந்தால், உங்கள் தசைகள் இறுக்கமடைந்து விடும்; இதனால், உங்கள் கணவரின் தொடுதலோ, ஆணுறுப்பு உள் நுழைப்பு முயற்சியோ உங்களுக்கு பெருத்த வலியை உண்டாக்கும். பதற்றத்தால், பெண்ணுறுப்பில் ஈரம் ஏற்படாத நிலை ஏற்பட்டு, உங்களின் உடலுறவு அனுபவம் மிகுந்த வலி மிகுந்ததாகி விடும்..!
4. ஈரம் அவசியம்..!
பெண்ணுறுப்பு உடலுறவின் போது, நன்கு ஈரம் கொண்டிருந்தால் தான் ஆணுறுப்பால் எளிதாக உள்ளே சென்று வெளிவர இயலும்; மேலும் பெண்ணுறுப்பில் ஈரம் இருந்தால் தான் அது வலியைக் குறைக்கும். பெண்ணுறுப்பில் ஈரம் ஏற்படவில்லையெனில், உங்கள் கணவரின் ஆணுறுப்பில் வாசலின் தடவி, அதன்பின் நீங்கள் உடலுறவு கொள்ளலாம்; இது உடலுவினால் ஏற்படும் வலியை மாயமாக்கும்.!
5. கண்டுபிடிப்பு..
நீங்கள் முதல் முறையாக உடலுறவு கொள்ளுமுன் அல்லது உடலுறவு கொண்டபின் உடலின் எந்த பாகத்தை தீண்டுகையில் உங்களுக்கு அதிக இன்பம் கிடைக்கிறது என்பதையும், உங்கள் கணவரின் எந்த பாகத்தால் அவர் அதிக இன்பம் பெறுகிறார் என்பதையும் நீங்கள் கண்டறிந்து செயல்பட்டால், அது தாம்பத்யத்தில் வலி ஏற்படுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும்..!
வலி உண்டாகாமல் உடலுறவு கொள்ள உதவும் நிலைகள்:
– முகத்தோடு முகம் பார்த்து காதல் கொண்டு உறவில் ஈடுபடுகையில்,
– உங்கள் கணவரின் ஆணுறுப்பு படத்தில் காட்டியுள்ளபடி உங்களினுள் நுழைந்தால்,
– உங்கள் கணவர் உங்களின் மீது படர்ந்திருந்தால்
இந்த 3 நிலைகளின் மூலம் நீங்கள் உடலுறவில் வலி இல்லாத, அதிகப்படியான சந்தோசத்தை பெற முடியும்..
மேற்கண்ட வழிகளைப் படித்து, அவற்றைக் கையாண்டு வலியில்லாத உடலுறவு கொள்க..! மேலும் மற்ற பெண்கள் உடலுறவு நேர வலியிலிருந்து விடுபட, இந்த பதிப்பினை பரப்பி உதவுங்கள்..! உடலுறவு குறித்து படிப்பதோ, அதை பகிர்வதோ தீய செயல் என்னும் அறியாமை மன நிலையிலிருந்து வெளிவந்து, பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முன்னோடியாக திகழ முற்படுங்கள்..!!