Home அந்தரங்கம் செக்ஸ் மேல் ஈர்ப்பு வர பெண்களுக்கு 237 காரணம் இருக்காம்!

செக்ஸ் மேல் ஈர்ப்பு வர பெண்களுக்கு 237 காரணம் இருக்காம்!

103

பாலுணர்வும், பாலியல் நினைவுகளும் இல்லாத உயிர்களே இல்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காக சிலருக்கு உடலுறவு பிடித்திருக்கலாம். இனப்பெருக்கத்திற்காகவும், மன அமைதிக்காவும் மட்டுமின்றி உறவானது பல நிலைகளில் நன்மை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு ஏன் அதன் மேல் அத்தனை ஆர்வம் என்று கண்டறிய நடைபெற்ற ஆய்வில் தாம்பத்ய உறவை பெண்களுக்குப் பிடிக்க 237 காரணங்கள் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

டேவிட் பஸ் என்ற உளவியல் நிபுணர் இதற்கான காரணத்தை ஆராய்ந்து தனது Why Women Have Sex என்று நூலில் எழுதியுள்ளார். 1006 பெண்களை ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நிபுணர் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அதில் ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருவிதமான பதிலளித்துள்ளனர். செக்ஸ் பற்றி பிடிக்க மொத்தம் 237 காரணங்களை கூறியுள்ளார்.

செக்ஸ் என்பது த்ரில்லான அனுபவம் என்று கூறியுள்ளனர் சிலர். அதுபோன்ற அனுபவத்திற்காகவே அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனராம். தம்பதியரிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இது சந்ததி உருவாக்கத்திற்கு என்பதையும் தாண்டி ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதனால் செக்ஸ் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது.

ஆணின் வாசனையால் கவரப்பட்டு உறவில் ஈடுபடுவதாக சிலர் கூறியுள்ளனர். மேலும் உறவில் ஈடுபடுவதானல் தனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர் சிலர்.

காதலும், செக்ஸ்சும் நீண்டகால இன்சூரன்ஸ் பாலிசி போன்றது பாதுகாப்பானது என்று கூறியுள்ளனர். செக்ஸ் மூலம் உடல் ஆரோக்கியமடைகிறது. அழகான கூந்தல் கிடைக்கிறது, சருமம் மினுமினுக்கிறது என்று அதனால் அதில் ஆர்வம் காட்டுவதாக சிலர் கூறியுள்ளனர்.

செக்ஸ் மருத்துவ குணம் கொண்டுள்ளது. இது மைக்ரேன் தலைவலியை குணமாக்குவதோடு ரிலாக்ஸ் ஆக்குகிறது. இது சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மாதாந்திர வலிகளை போக்குவதில் செக்ஸ் சிறந்த மருந்துப்பொருளாக செயல்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு செக்ஸ் சிறந்த நிவாரணியாக இருந்ததாக கூறியுள்ளனர். உறவுக்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதால் அதனை விரும்புவதாக கூறியுள்ளனர்.

உளவியல் நிபுணரின் ஆய்வின் படி ரஷ்யாவில் 73 சதவிகித பெண்கள் அதீத காதலை விரும்புகின்றனர். ஜப்பானிய பெண்கள் 63 சதவிகிதம் பேரும், இங்கிலாந்தில் 75 சதவிகிதம் பேரும் காதலில் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் ஆண்கள் அந்த அளவிற்கு உற்சாகம் காட்டுவதில்லை. ஜப்பானில் 41 சதவிகிதம் ஆண்களும், ரஷ்யாவில் 61 சதவிகித ஆண்களும்தான் செக்ஸ் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர்.

திருமணமான புதிதில் தொடங்கி நடுத்தர வயதை தாண்டியும் செக்ஸ் விருப்பத்திற்குரியதாக இருக்க இதுபோன்ற 237 காரணங்களை பெண்கள் கூறியுள்ளதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் உளவியல் நிபுணர்கள்.