Home பாலியல் செக்ஸ் தெரபி என்றால் என்ன? ஏன் தம்பதிகள் இதை தெரிந்துக் கொள்ள வேண்டும்? மருத்துவர் ஆலோசனை!

செக்ஸ் தெரபி என்றால் என்ன? ஏன் தம்பதிகள் இதை தெரிந்துக் கொள்ள வேண்டும்? மருத்துவர் ஆலோசனை!

53

இங்கு செக்ஸ் தெரபி என்றால் என்ன? இதை பற்றி தம்பதிகள் அறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றி மருத்துவ ஆலோசகர் கூறுவது தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக்ஸ் என்றாலே தவறு, அது தீண்டத்தகாத விஷயம் என்ற பார்வையும், நோக்கமும் தான் சமூகத்தில் விளைவிக்கப்படுகிறது. செக்ஸ் தவறு எனில், குடும்பங்கள் பாவச் செயலா? செக்ஸ் என்றால் என்ன? என்பது பற்றிய தெளிவினை பிறக்க செய்ய வேண்டும். ஆண், பெண் மத்தியிலான வேறுபாடுகள், உடல் ரீதியான, மன ரீதியான உணர்வுகள் பற்றிய தெளிவும், அறிவும் பிறந்தாலே கற்பழிப்பு, மானபங்கம் போன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறைய வெகுவான வாய்ப்புகள் உண்டு.

தாம்பத்திய பிரச்சனைகள்! ஏதனும் ஒரு கட்டத்தில் எல்லா தம்பதிகள் மத்தியிலும் தாம்பத்தியம் சார்ந்த எதாவது பிரச்சனை எழும் வாப்புண்டு. முதிர்ச்சி அடைந்தவர்கள் மத்தியில் இது சீக்கிரம் ஒரு தீர்வை கண்டறிய செய்யும். இதுவே புதுமண தம்பதிகள் அல்லது முதல் குழந்தை பிறந்த பிறகான சூழலில் வாழும் தம்பதிகள் மத்தியில் இது சிறுசிறு சண்டைகள், வீட்டிலேயே முறைத்துக் கொண்டு வாழும் தருணம் ஏற்பட காரணியாக அமையும்.

படுக்கையறை சண்டைகள்! ஒவ்வொரு வயதிலும், ஒவ்வொரு மாற்றங்கள் உண்டாகும். இது தாம்பத்திய வாழ்க்கைக்கும் பொருந்தும். எல்லா வயதிலும், கால சூழலிலும் ஒரே மாதிரியான தாம்பத்தியம் அமையாது. சில தம்பதிகள் மாதவிடாய் காலத்திலும், மாதவிடாய் முடிவடையும் காலத்திலும் கூட சில சிக்கல்களுக்கும், தாம்பத்திய பிரச்சனைக்கும் ஆளாகின்றனர்.

சங்கடங்கள்! ஒரு சில நேரங்களில் இதற்கான தீர்வு கிடைக்காமல் தம்பதிகள், ஏமாற்றம், காயம், கோபம், ஆத்திரம், குற்றச்சாட்டுகள், தாங்களே தங்களுடைய தாம்பத்திய வாழ்க்கைக்கும், இல்லற வாழ்க்கைக்கும் ஒரு தடையாக அமைந்து விடுகின்றனர்.

செக்ஸ் தெரபி ஆலோசகர்! செக்ஸ் தெரபி என்பது உங்கள் தாம்பத்திய வாழ்க்கை ரீதியிலான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் மருத்துவம் ஆகும். தாம்பத்திய வாழ்க்கை உடல் ரீதியாக தான் தாக்கம் எதிர்கொள்ளும் என்பது தவறு. பெரும்பாலான தாம்பத்திய பிரச்சனைகளுக்கு மன ரீதியான பிரச்சனைகள் தான் காரணம்.

தீர்வு! செக்ஸ் தெரபி என்பது ஒருவருக்கானது அல்ல. கணவன், மனைவி இருவருக்கானது. நீங்களாக ஒருவரை ஒருவர் குற்றம் கூறி கொள்ளலாம். ஆனால், யாரிடம் பிரச்சனை, யார் தவறு செய்கிறார்கள் என்பது, இருவரும் ஒன்றாக பேசும் போதும், சிகிச்சை மேற்கொள்ளும் போதுதான் தெரியும்.

புரிதல்! எல்லாருக்கும் ஒரே மாதிரியான தாம்பத்திய ஈடுபாடு, விருப்பம், ஆசைகள் இருக்காது. சிலர் தகாது என்பது, சிலர் விரும்பி ஈடுபடலாம். இது இருவரின் வளர்ந்த சூழல், அறிவு சார்ந்து வேறுபடும். எப்படி எல்லாம் உறவில் ஈடுபட வேண்டும், எப்படி எல்லாம் ஈடுபட கூடாது, எதை செய்யலாம், செய்ய கூடாது என்ற புரிதல் அவசியமானது. சிலருக்கு சில உணர்வுகள் தூண்டப்படுவதில்லை எனில் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். இப்படி உங்கள் தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகள் உண்டு

சமநிலை அவசியம்! அனைத்திற்கும் மேலாக தம்பதிகள் இருவர் மத்தியிலும் மதிப்பு, மரியாதையில் துவங்கி, உணர்வு வரையிலான சமநிலை அமைதல் அவசியம்.