கணிதத்திலும், அறிவியலிலும் மட்டுமல்ல, இல்வாழ்விலும் கூட சில ரூல்களை ஃபாலோ செய்தால் தான் ரிசல்ட் பெஸ்ட்டாக இருக்கும்.
அதில் திருமணமான தம்பதியர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய 80/20 ரூல் என்ன என்பது பற்றி அறிந்துக் கொள்ளலாம் வாங்க…
உணவில் இருந்து உறவு வரை…
இந்த 80/20 ரூல் என்பது நாம் உண்ணும் உணவு முதல், உறவின் உணர்வுகள் வரை எல்லா அம்சங்களிலும் பொருந்தும். இது உங்கள் உடல், பொருளாதாரம், உறவு என அனைத்தும் ஆரோக்கியமாக அமைய உதவும்.
நூறு சதவீதம்!
நாம் விரும்புவது போலவே அனைத்தும் நூறு சதவீதம் அமைந்துவிடாது. குறைந்தபட்சம் 10 – 20% நாம் நினைப்பதற்கு எதிர்மாறாக தான் அமையும். இது, பொருளாதார லாப நஷ்டம், ஆரோக்கியத்தின் நிலை மற்றும் உடலுறவு வரை நாம் கண்கூட பார்க்க முடியும்.
விட்டுக்கொடுக்க வேண்டியது!
உங்கள் துணையின் தனிப்பட்ட விருப்பம், சுதந்திரம் என நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டியது தான் இந்த 20%. இதை நாம் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முயன்றாலும் அது எதிர்மறை விளைவுகளை தான் பரிசளிக்கும். இதை நீங்களும் உங்கள் துணையிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டிய ஒன்று தான்.
விருப்ப – வெறுப்பு!
அவரவருக்கு என தனி விருப்பங்களும், வெறுப்புகளும் இருக்கும். இதில் தலையிட முடியாது. தனியாக பயணிக்க வேண்டும், நண்பர்களுடன், உறவினர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும், புத்தகம் எழுதுவது, வேறு விஷங்கள் கற்பது என பலவன இதில் அடங்கும்.
செக்ஸிலும் கூட…
இந்த 80/20 ரூல் தாம்பத்திய உறவிற்கும் பொருந்தும். தாம்பத்தியம் என்பதும் கூட அதுவாக அமைய வேண்டும். 80% இருவரின் ஒருமித்த விருப்பமும், 20% அவரவருடைய தனிப்பட்ட விருப்பமும் இதில் அடங்கும்.
முக்கியமானது!
எப்போது இந்த 80 குறைய ஆரம்பித்து, தனிப்பட்ட வாழ்வெனும் 20 அதிகரிக்க ஆரம்பிக்கிறதோ, அன்று முதல் உறவில் பிரிவு அதிகரிக்க ஆரம்பிக்கும். எனவே, உங்கள் துணையின் சுதந்திரம் கெடாமல் 80 கட்டிக்காப்பாற்றி கொள்வது உங்கள் திறமை.