இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றில், 10ல் 3 பேர் ஆடைகளின்றி தங்களது உடலை புகைப்படம் எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ளனர் எனவும் 40 வயதிற்கு உட்பட்ட ஆங்கிலேயர்கள் 21 சதவீதத்தினர் கேமிரா முன்பாக செக்ஸ் வைத்து கொள்கின்றனர் என்றும் தெரிய வருகிறது.மேலும் அந்த ஆய்வில், ஆன்லைன் செக்ஸ் அல்லது தங்களது சொந்த உறவு அல்லாத நபர்களுடனான செக்ஸ் வைத்து கொள்வோரின் எண்ணிக்கை 60 சதவீதம் ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் புதிய கருவிகளை மக்கள் அன்றாடம் எந்த வகையில் பயன்படுத்தி கொள்கின்றனர் என்பதை இந்த சர்வே வெளிப்படுத்துகிறதாம்.
sex on camera
அண்மையில் இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் 15 சதவீதத்தினர் வெப்கேம் வழியாகவும், 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் கேமிரா போன்ற ஒன்றை (மொபைல் போன் அல்லது வேறு கருவி) கொண்டு புகைப்படங்களை எடுத்து கொள்கின்றனர்.எனினும், 7 முதல் 8 சதவீதத்தினர் மறுப்பு தெரிவிக்காமல் அதேவேளையில் கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளதால் இந்த சதவீதம் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது. பழைய தலைமுறையினரிடம், புகைப்படம் எடுத்தல் மற்றும் அதனை பதிவு செய்யும் தொழல்நுட்பம் அதிகமாக பிரபலமாகவில்லை.ஆனால் இதுபோன்ற கருவிகளை இளைய தலைமுறையினர் எளிதில் பயன்படுத்துகின்றனர். அதனால் இந்த சதவீத எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், 40 வயதை கடந்த பழைய தலைமுறையினரில் 6 சதவீதம் பேர் கேமிரா முன்பாக செக்ஸ் வைத்து கொள்கின்றனர். தங்களது ஆடைகளற்ற புகைப்படங்களை 8 சதவீதம் பேர் எடுத்து வைத்து கொள்கின்றனர்.
இதுபோன்ற மற்றொரு சர்வேயில் தொழில் நுட்பம் சார்ந்த பாலியல் நிகழ்வுகள் அதிகம் நடப்பதாக தெரிய வந்துள்ளது. அதில், 34 சதவீத ஆண்கள் மற்றும் பெண்கள் செக்ஸ் தகவலகளை பரிமாறி கொள்வதும், பலான புகைப்படங்களை ஸ்நாப்சாட் அல்லது சாட்ரூம்சில் அனுப்பி கொள்வதும், வெப்கேம் மற்றும் வீடியோபோன் வழியாக சைபர் செக்ஸ் வைத்து கொள்வதுமாக உள்ளனர் என அந்த கருத்துகணிப்பு தெரிவித்துள்ளது.ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்ட ஆண் மற்றும் பெண் என 1,612 பேரும் 18 வயதிற்கு மேற்பட்டோர் ஆவர். அவர்கள், நாங்கள் செக்ஸ் விசயத்தில் வழக்கமாக ஆர்வமுடன் இருப்பவர்கள் என தெரிவித்து உள்ளனர். 5ல் ஒருவர் கூறுகையில், தங்களது விருப்பங்கள் தொடர்ந்து நீடித்த நிலையில் இருப்பதற்காக இத்தகைய விசயங்களை பரிமாறி கொள்வதாக கூறுகின்றனர்.
தம்பதிகளில் 14 சதவீதம் பேர் தாங்கள் பணி காரணமாக வேறு வேறு இடங்களில் இருப்பதால் இது மிக அவசியமாகிறது என்று கூறியுள்ளனர். 6 சதவீதம் பேர் தங்களுக்கு துணைவராக இல்லாத நபர்களுடனும் இந்த முறையில் தொடர்பில் இருப்பதாகவும், ஆன்லைன் வழியாக இந்த முறையில் தொடர்பு கொள்வதால் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதும் மற்றும் பிறருடன் பேசி கொள்வதற்கும் ஒரே வழியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.