Home பாலியல் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தியை பாதிக்கும் செயல்கள்

செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தியை பாதிக்கும் செயல்கள்

44

தற்போது பல ஆண்கள் மற்றும் பெண்கள் பாலுறவில் சிறப்பாக ஈடுபட முடியாமல் உள்ளனர். இதற்கு காரணம் மன அழுத்தத்தினால், பாலுணர்ச்சியை அதிகரிக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படுவது தான்.

எனவே இந்த செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்க மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, தூக்கமின்மை, மோசமான டயட், உடல் உழைப்பு இல்லாமை போன்றவற்றை சரிசெய்ய வேண்டும். குறிப்பாக செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் என்னவென்று தெரிந்து அவற்றை உட்கொண்டு வந்தால், செக்ஸ் ஹார்மோன்கள் அதிகரித்து, அதனால் தம்பதிகள் தாம்பத்தியத்தில் சந்தோஷம் காணலாம்.

* தினமும் இரவில் படுக்கும் முன் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மனம் அமைதி பெற்று, மன அழுத்தம் குறையும். அதிலும் ஒரு டம்ளர் பாலில், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வர, செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் குறையும்.

* உடலுக்கு நல்ல கொழுப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல கொழுப்புக்களை எடுக்கிறோமோ, அவ்வளவு கெட்ட கொழுப்புக்களை உடலில் இருந்து வெளியேற்றலாம். கெட்ட கொழுப்புக்கள் உடலில் குறைந்தால், இரத்த ஓட்டம் சீராக இருந்து, ஹார்மோன்களும் சீராக உற்பத்தி செய்யப்படும்.

* பெண்களின் செக்ஸ் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனை அதிகரிக்கும் உணவுகளான ஆலிவ் ஆயில், பட்டாணி, ஆளி விதை, பூண்டு, பீட்ரூட், சூரியகாந்தி விதை போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். இதனால் செக்ஸ் ஹார்மோன் குறைவதைத் தடுக்கலாம்.

* உங்களுக்கு ஏதேனும் ஓர் உணவுப் பொருள் அலர்ஜியை ஏற்படுத்துமானால், அவற்றை முற்றிலும் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அலர்ஜி உண்டாக்கும் உணவுகளை உட்கொண்டு வர, உடலினுள் கார்டிசோல் ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அதனால் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.

* நீங்கள் அடிக்கடி கண்ட மாத்திரைகளை எடுத்து வந்தால், அதனால் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும். எனவே எந்த ஒரு பிரச்சனைக்கும் சுய மருத்துவம் பார்ப்பதைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். மருத்துவரின் உரிய பரிந்துரை இல்லாத மருந்துகளை எடுக்கும் கண்ட மருந்துகளால், உங்கள் பாலியல் வாழ்க்கை தான் பாதிக்கப்படும்.