உடலுறவின் போது சில சமயங்களை உராய்வு காரணமாக வலி உண்டாக வாய்ப்புகள் உண்டு. இதை தவிர்க்க லியூப்ரிகன்ட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த நான்கு பொருட்களை லியூப்ரிகன்டாய் பயன்படுத்துவது தவறு.
தாம்பத்தியத்தின் போது நோய் தொற்று, உடல் உறுப்புகள் உராய்வு ஏற்படும் போது, வலி உண்டாக வாய்ப்புகள் உண்டு. உராய்வு காரணமாக வலி உண்டாவதை தடுக்க, லியூப்ரிகன்ட் எனப்படும் எண்ணெய் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை மகப்பேறு மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.
ஆனால், சிலர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு பொருட்களை லியூப்ரிகன்டாய் பயன்படுத்த முயல்கின்றனர். பொதுவாகவே பிறப்புறுப்பு பகுதி மிக மென்மையானது. லியூப்ரிகன்டை நீங்கள் பிறப்புறுப்பில் பயன்படுத்துவதால், லியூப்ரிகன்டில் சேர்க்கப்படும் சில மூலப்பொருட்கள் எரிச்சல், அரிப்பு போன்ற தீய தாக்கம் ஏற்பட காரணமாக இருக்கிறது. ஆதலால், ஒருசில மூலப்பொருள் கலப்பு உள்ள லியூப்ரிகன்டை பயன்படுத்துவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். மேலும், இதுப் போன்ற விஷயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது…
கிளிசரின்! கிளிசரின் ஒரு சர்க்கரை ஆல்கஹால் ஆகும். அதிகப்படியாக கிளசரின் பயன்படுத்துவது பாக்டீரியா உருவாக்கத்தை அதிகரிக்கும். இதனால், கிருமிகள் தொற்று உண்டாக வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக பெண்களுக்கு.
பெட்ரோகெமிக்கல்ஸ்! புரோப்பிலீனில் கிளைகோல், பாலிஎதிலீன் கிளைகோல் பெட்ரோகெமிக்கல்ஸ் பொருட்களை பயன்படுத்த கூடாது. இவற்றில் அதிக ஃப்ளேவர்கள் மற்றும் சூட்டை அதிகரிக்கும் தன்மை இருக்கின்றன. இதன் காரணத்தால் அதிகரிக்கும் சூடு, எரிச்சல் உணர்வை தரும். இது உங்கள் தாம்பத்திய உணர்வை அதிகரிக்கும். மேலும், இது உங்கள் அந்தரங்க உறுப்புகளிலும் தாக்கத்தை உண்டாக்கலாம்.
பிரசர்வேட்டீவ்ஸ்! பாராபென்ஸ், பென்சைல் ஆல்கஹால், மற்றும் சிட்ரிக் அமிலம் போன்ற பிரசர்வேட்டீவ்ஸ் மூலப்பொருடள் கலப்பு உள்ள லியூப்ரிகன்டை ஒருபோதும் நீங்கள் பயன்படுத்த கூடாது. இவை, பயனபடுத்திய பிறகு ஒட்டிக் கொள்வது போன்ற உணர்வை தரும். மேலும், அதிகமாக இவற்றை பயன்படுத்துவது, எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டாக வாய்ப்புகளாக அமைகின்றன.
பென்ஸோகேயின்! பென்ஸோகேயின் உணர்சியின்மையை போக்கி, உணர்ச்சி உண்டாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள். இது, வலியில்லாமல் உடலுறவில் ஈடுபட பயன்படுத்துவது தவறு. இதனால், திசுக்களில் காயம், கிழிசல் அல்லது அபாயமான தாக்கங்கள் உண்டாகலாம்.
ஆணுறைகள்! சில ஆணுறைகளிலேயே இப்போது லியூப்ரிகன்டாய் சேர்த்து தான் தயாரிக்கப்படுகின்றன. வேண்டுமென்றால் நீங்கள் அதை வாங்கி பயன்படுத்தலாம்.
இயற்கை பொருட்கள்! இல்லையேல், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்யை லியூப்ரிகன்டாய் பயன்படுத்தலாம்.