உண்மையில் அதிகமாக / குறைவாக உடலுறவில் ஈடுபடுவதால் எந்தவித தீய தாக்கங்களும் ஏற்பட போவதில்லை. இது ஆண், பெண் மத்தியில் உறவு, உடல், உணர்வு ரீதியாக இன்பத்தை தான் அதிகரிக்கும்.
மேலும், உடலுறவில் ஈடுபடுவதால் மன அழுத்தம் குறைவது, உடல் சோர்வு நீங்குவது போன்ற ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும் என்பது தான் உண்மை…
தினமும் ஈடுபடலாமா…
உங்களாலும், உங்கள் துணையாலும் முடியும் என்றால், இருவரும் மன ரீதியாக முழு விருப்பத்துடன் இணைகிறீர்கள் என்றால்? கண்டிப்பாக தினமும் கூட உடலுறவில் ஈடுபடலாம். இதில் எந்த தவறும் இல்லை.
ஆய்வுகள் என்ன கூறுகின்றன…?
பல ஆய்வுகளில் உடலுறவில் அதிகம் ஈடுபடுவது தீய தாக்கங்களை உண்டாக்குகின்றன என்று கூறுகின்றனர். அது போன்ற ஆய்வுகளில் பெரும்பாலும் விருப்பமின்றி ஈடுபடுதல், அல்லது அவரவர் உடல்நல / மனநல கோளாறுகள் குறித்தும் கூறப்பட்டிருக்கின்றன. எனவே, இது அனைவருக்கும் பொருந்துவது இல்லை.
அமெரிக்க ஆய்வு!
அமெரிக்க ஆய்வொன்றில், உடலுறவில் ஈடுபடுவதற்கும், தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் மறைமுக தொடர்புகள் இருக்கின்றன என கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்க ஆய்வு தகவல்கள்! ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் – 128 திருமணமான ஜோடிகள் பங்குபெற்றவர்களுடைய வயது – 35 முதல் 65 வரை க்ரூப் – 128 ஜோடிகளும் இரண்டு க்ரூப்புகளாக பிரிக்கப்பட்டனர். க்ரூப் 1 – க்ரூப் 1 சேர்ந்தவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை உடலுறவில் ஈடுபட்டு வந்தனர். க்ரூப் 2 – க்ரூப் 2 சேர்ந்தவர்களை கட்டாயாப்படுத்தவில்லை, எப்போதெல்லாம் தோணுகின்றதோ அப்போது உடலுறவில் ஈடுபட ஆய்வாளர்கள் கூறினர்.
பகுப்பாய்வு!
பகுப்பாய்வில் க்ரூப் 1-ஐ சேர்ந்தவர்களை காட்டிலும் க்ரூப் 2-வை சேர்ந்தவர்களே அதிக மகிழ்ச்சியாக உணர்ந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் விருப்பப்படும் நேரத்தில் மட்டும் தான் உடலுறவில் ஈடுபட்டனர்.
உண்மை என்ன?
உடலுறவு தம்பதிகளை மகிழ்ச்சியடைய செய்வதில்லை, மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள் தான் அதிகம் உடலுறவில் ஈடுபடுகின்றனர். இது தான் அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் மூலம் கண்டறிந்துள்ளனர். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்