Home சூடான செய்திகள் செக்ஸை உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!

செக்ஸை உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!

27

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்… அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை… சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி… ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, “பாலுணர்வு” என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது “டேக் இட் ஈஸி” கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் “உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை” என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்… பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்… இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி… அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி… அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்… ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன… பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?